ஹட்டன், கொட்டகலை நகரில் உள்ள கோயிலில் நடைபெற்ற திருவிழாவிற்கு கொண்டு வரப்பட்ட யானையொன்று ஒருவரைத் தாக்கியுள்ளதென திருவிழா ஏற்பாட்டுக் குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
யானையின் தாக்குதலில் காயமடைந்த நபர் கொட்டகலை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த நபரின் நிலை மோசமாக இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (12) கோயில் ஊர்வலம் முடிந்து, யானை கோயில் வளாகத்தில் ஒரு இடத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தபோது ஒருவர் யானைக்கு உணவளிக்க முயன்றவேளையில் குறித்த நபரை யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.