பொலன்னறுவை – தியபெதும திக்கல்பிட்டிய பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (12) இரவு காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தியபெதும பொலிஸார் தெரிவித்தனர்.
கிரித்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் ஒருவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் தனது மகளின் வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ள நிலையில், நேற்றைய தினம் இரவு திக்கல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வயலுக்குச் சென்றிருந்த போது காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தியபெதும பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.