திவுலபிட்டிய – ஹொரகஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 280,000 ரூபாய் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
21 வயதுடைய குறித்த பெண் சிறிது காலமாக ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த பெண் ஹெரோயினுடன் மினுவாங்கொடை நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தப்பட்ட பின்னர், மார்ச் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.