ரொக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா மற்றும் அரவிந்த் சிதம்பரம் உள்ளிட்ட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன் 3 ஆவது சுற்றுப் போட்டி ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 29-ஆவது நகர்த்தலில் நுயென் தாய் டாய் வானை (செக்குடியரசு) தோற்கடித்தார்.
முதல் இரு போட்டிகளில் பிரக்ஞானந்தா இந்த தொடரில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.