நெடுங்கேணி பகுதியில் தொடர்ச்சியான அடை மழை காரணமாக நெற்செய்கையானது பாதிக்கப்பட்டுள்ளது.
நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள நெடுங்கேணி குளம், ஒலுமடு குளம், இலுப்பை குளம், மருதோடை குளம், அரியாமடு குளம் ஆகிய குளங்களுக்கு கீழ் நெற்செய்கை பண்ணப்பட்டு அறுவடைக்கு தயாரான நிலையில் தொடர்ச்சியாக பெய்து வந்த அடை மழை காரணமாக நீரில் மூழ்கி அழிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.