மஸ்கெலியாவில் இரத்ததான முகாம் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெற்றது.
இந் நிகழ்வை மஸ்கெலியா இளைஞர் கழகம் ஏற்பாடு செய்து இருந்தது.
நிகழ்வில் மூன்று மத குருமார்கள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள், தாதியர்கள், கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள், தாதியர்கள், நாவலப்பிட்டி வைத்திய சாலையில் உள்ள வைத்தியர்கள், தாதியர்கள் கலந்து கொண்டனர்.
மஸ்கெலியா பகுதிகளில் உள்ள இளைஞர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
தானம் செய்யப்பட்ட இரத்தம் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.



