மன்னாரில் நேற்று முன்தினம் (30) மாலை பெரியபாலம் பகுதியில் உந்துருளியில் வந்த இருவரிடம் திடீர் சோதனை செய்தபோது அதில் ஒருவர் ஜஸ் போதை பொருளை உடமையில் வைத்திருந்மை தெரியவந்தது.
இதனை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் கிளிநொச்சி பூநகரி பிரதேச நாச்சிகுடாவில் வசிக்கும் சர்வதேச மனித உரிமை ஆணைக்குழு இணைப்பாளர் A.K.M ஹமீம் என தெரிவிக்கப்படுகிறது.
இவர் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்களும் தெரிவிக்கப்படுவதோடு இவ் உத்தியோகர் அடையாள அட்டையை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

