போலியான தகவல்களுக்கு எதிராக செயல்படுதல் வெளிநாட்டு செய்திகளை பயன்படுத்தல் மற்றும் தலையீடு செய்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் உண்மையான மற்றும் சூழல் சார்ந்த தெளிவுபடுத்தலை உருவாக்கும் பயிற்சி திட்டத்தின் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான செய்தி அறிக்கையிடல் தொடர்பான பயிற்சி செயலமர்வு நேற்று 31/05 மட்டக்களப்பு கல்லடி கிறீன் கடான் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
இதன்போது போலியான செய்திகள், வெளிநாட்டு தகவல் கையாளல் மற்றும் தலையீடு சார்ந்த செய்திகளுக்கு எதிராக போராடும் ஒன்றிணைந்த கூட்டமைப்பு செய்தி அறிக்கையிடல் தொடர்பான பயிற்சி செயலமர்வு.
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் இன்டர் நியூஸ் ஆகிய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான செய்தி அறிக்கையிடல் பயிற்சி செயலமர்வில் வளவாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷிகார் அனீஸ் கலந்து கொண்டார்.
ஊடகவியலாளர்களுக்கான குறித்த பயிற்சி செயலமர்வில் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் இன்டர் நியூஸ் ஆகிய நிறுவனங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


