யாழ்ப்பாணம் – தென்மராட்சி மட்டுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022ஆம் ஆண்டு மக்கள் பாவனைக்காகத் திறக்கப்பட்ட போதிலும் இன்றுவரை பயன்பாடு இல்லாத நிலையில் காணப்படுகின்றது.
200 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு சுமார் மூன்று வருடங்களை அண்மிக்கும் நிலையில் எந்தவித பயனுமற்றுக் காணப்படுகிறது.
இந்நிலையில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை இயங்க வைக்கும் நோக்கில் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் இன்றையதினம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
அதனை இயங்க வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என மக்களின் கருத்துக்களை கேட்டு ஆய்வு செய்தார்.



