• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தெல்தெனிய கொ*லை சம்பவம்; சந்தேகநபரின் திடுக்கிடும் வாக்குமூலம்.!

Mathavi by Mathavi
June 25, 2026
in இலங்கை செய்திகள்.
0
தெல்தெனிய கொ*லை சம்பவம்; சந்தேகநபரின் திடுக்கிடும் வாக்குமூலம்.!
Share on FacebookShare on Twitter

கண்டி, தெல்தெனியவில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை வைத்தியசாலையைச் சேர்ந்த பிசியோதெரபியின் மரணம், கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட கொலை என்பது பிரேதப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 17 அன்று தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிற்குள் வெலிகமவைச் சேர்ந்த 33 வயதுடைய ஷம்யா தர்ஷனி என்ற பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அவர் ஜூன் 3 முதல் ஜூன் 16 வரை நுவரெலியாவில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவரின் உடலை ஹோட்டல் அறையிலிருந்து சந்தேகநபர் வெளியே கொண்டு செல்வதைக் காட்டும் சிசிடிவி (CCTV) காட்சிகள் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன் விளைவாக, வலான மத்திய குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், முக்கிய சந்தேக நபரையும் அவரது மனைவி மற்றும் குழந்தையையும் நேற்று (24) அதிகாலையில் யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 43 வயதுடையவர் எனவும், சந்தேகநபரான பெண் 35 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் கண்டி – பல்லேகலே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டனர்.

கைது செய்யப்படும் போது சந்தேகநபர் தொப்பி, முகக்கவசம் மற்றும் போலித் தலைமுடி (Wig) அணிந்திருந்ததுடன், அவரது மனைவி முஸ்லிம் பெண் போன்று மாறுவேடத்தில் இருந்தார்.

பிரதான சந்தேகநபர் தன்னை ஒரு தமிழர் என காட்டிக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் ஒரு சில தமிழ் வார்த்தைகளையும் கற்றுக்கொண்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதான சந்தேகநபர், தான் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கும் அங்கிருந்து குருணாகல் சென்று, அங்குள்ள தமது ஏனைய இரு பிள்ளைகளையும் பார்த்த பின்னர் சரணடையவிருந்ததாகக் கூறினாலும், அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்லவே திட்டமிட்டிருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலை நடக்கும் போது தான் திகன பகுதியிலுள்ள வீட்டில் இருந்ததாக சந்தேகநபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

அத்துடன் சந்தேகநபரால் ஏமாற்றப்பட்ட பெண்களிடம் தன்னை சந்தேகநபரின் “மூத்த சகோதரி” என்றே அடையாளப்படுத்தியுள்ளார்.

தமது மூன்று பிள்ளைகளில் இருவரை கடந்த 21 ஆம் திகதி நாரம்மலவிலுள்ள வீட்டில் விட்டுச் சென்றதும் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

தான் விடுதிக்கு சென்று பாரத்த போது குறித்த பெண் உயிரை மாய்த்து கொண்டிருந்ததால் பயந்துபோய் சடலத்தை வாகனத்தில் கொண்டுவந்து விட்டதாக சந்தேகநபர் கூறினாலும், பிரேதப் பரிசோதனையில் அந்தப் பெண் கழுத்து நெரிக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும், அந்தப் பெண் தனக்குப் பணம் கொடுத்திருந்தாலும் அது 1.5 கோடி ரூபாய் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து உதவிகளை வழங்கிய 49 வயதுடைய குண்டசாலை பிரதேச சபை ஊழியர் ஒருவரும் நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை நடந்த தினத்தன்று மாலை, சடலத்துடன் சந்தேகநபர் இந்த ஊழியரின் வீட்டிற்குச் சென்று தங்கியதுடன் சடலத்தைக் கொண்டுசெல்ல காரில் பின் தொடர்ந்ததுடன், சந்தேகநபரின் குடும்பத்தினரை மாத்தளையிலுள்ள தாயார் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த ஊழியரின் மனைவியிடமிருந்தும் சந்தேகநபர் 5 இலட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.

அம்பாறை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றபோதே இந்த இயன்முறை சிகிச்சையாளருடன் சந்தேகநபர் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.

சந்தேகநபர் 30 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்களை இலக்கு வைத்தே இந்த மோசடிகளைச் செய்துள்ளார்.

கட்டுகஸ்தோட்டை பகுதியில் ஆடைக்கடை நடத்திய இவர், அங்கு வேலை செய்த பெண்ணிடமிருந்தும் 2 இலட்சம் ரூபாயைப் பெறத் திட்டமிட்டிருந்தார். பெண்களை ஏமாற்றிப் பெறும் பணத்தைக் கொண்டு இவர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

சந்தேகநபர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் பல முந்தைய மோசடி சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

பிரதான சந்தேகநபரும், அவரது மனைவியும் மேலதிக விசாரணைக்காக தற்போது நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு ஜேர்மன் துணைத் தூதுவரிடம் ஊடகவியலாளர்கள் கோரிக்கை.!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு ஜேர்மன் துணைத் தூதுவரிடம் ஊடகவியலாளர்கள் கோரிக்கை.!

by Mathavi
June 25, 2026
0

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கும், அரசாங்கத்தால் கொண்டுவரப்பட உள்ள ஊடக சாசனத்தை நிறுத்துவதற்கான அழுத்தங்களை வழங்குமாறும் இலங்கைக்கான ஜேர்மன் துணை தூதுவர் சார...

ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க ஆகியோர் கைது.!

ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க ஆகியோர் கைது.!

by Mathavi
June 25, 2026
0

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச...

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஐந்து மாகாணங்களில் மொட்டுவின் ஆட்சியே.!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஐந்து மாகாணங்களில் மொட்டுவின் ஆட்சியே.!

by Mathavi
June 25, 2026
0

உரிய காலத்தில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தம்மால் வெற்றி பெற முடியும் என்ற பூரண நம்பிக்கை தங்களுக்கு இன்னும் ஏற்படவில்லை...

சுற்றுச்சூழல் என்ற பெயரில் மாகாண சபைகளின் அதிகாரங்களில் மத்திய அரசின் தலையீட்டை ஏற்க முடியாது.!

சுற்றுச்சூழல் என்ற பெயரில் மாகாண சபைகளின் அதிகாரங்களில் மத்திய அரசின் தலையீட்டை ஏற்க முடியாது.!

by Mathavi
June 25, 2026
0

சுற்றுச்சூழல் என்ற பெயரில் மாகாண சபைகளின் அதிகாரங்களில் மத்திய அரசின் தலையீடை ஏற்க முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கல்...

காக்கைதீவு குப்பை மேட்டில் பாரிய தீ விபத்து – சுமார் 200 குடும்பங்கள் பாதிப்பு!

by selvan
June 24, 2026
0

யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில்  ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200 க்கும்...

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

by selvan
June 24, 2026
0

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவினால் இன்று (24) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி,...

சாதாரண தர பரீட்சையில் இம்முறை  11,790 பரீட்சாத்திகள் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி

இவ்வாண்டு நடைபெற உள்ள பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் இல்லை!

by selvan
June 24, 2026
0

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். எனவே முன்னர்...

தேர்தல்களின் போது அழியா மை பயன்படுத்துவதை தவிர்த்தால் சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க முடியும்!

by selvan
June 24, 2026
0

தேர்தல்களின் போது வாக்களித்ததை உறுதிப்படுத்துவதற்காக விரலில் மை பூசும் முறையை நீக்குவதன் மூலம், ஒரு தேர்தலின் போது சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க...

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

by selvan
June 24, 2026
0

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (24) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 113 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் கிடைத்தன. இதன்படி,...

சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை இணைய வழியில் மட்டுமே பெறலாம்!

சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை இணைய வழியில் மட்டுமே பெறலாம்!

by selvan
June 24, 2026
0

2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான சான்றிதழ்கள் இணையவழி முறைமையின் ஊடாக மட்டுமே வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக பரீட்சைகள்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி