• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் தகவல்கள் குவிகின்றன – ஆளுநர் தெரிவிப்பு.!

admin by admin
December 5, 2024
in இலங்கை செய்திகள்., கிளிநொச்சி செய்திகள், மன்னார் செய்திகள், முல்லைதீவு செய்திகள், முல்லைத்தீவு செய்திகள், யாழ் செய்திகள், வவுனியா செய்திகள்
0
சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் தகவல்கள் குவிகின்றன – ஆளுநர் தெரிவிப்பு.!
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத் தொடர்ந்து அதிகளவிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு அனுப்பி அவர்கள் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

கடந்த மாதம் இடம்பெற்ற வெள்ள இடர் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் முன்களப் பணியாளர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை (04.12.2024) இடம்பெற்றது.

இதன்போது யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் 302 பேரும், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்களில் பணியாற்றும் 37 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் 44 பேரும், மன்னார் மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் 80 பேரும், வவுனியா மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் 63 பேரும் மதிப்பளிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய மாவட்டச் செயலர்கள், கடந்த காலங்களைவிட இம்முறை இடரின்போது உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்பு அதிகளவில் இருந்ததாகக் குறிப்பிட்டனர்.

வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் தனது உரையில், நாம் ஒவ்வொருவரும் எமது குடும்பங்களைப் பாதுகாக்க முற்படும்போது நீங்கள் எங்கள் மக்கள் எல்லோரையும் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் குடும்பங்கள் உண்டு. எனவே உங்களின் பாதுகாப்பும் மிக முக்கியம். ஒவ்வொரு பணியாளரது பாதுகாப்புத் தொடர்பிலும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்கள் கவனம் எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

பிரதம விருந்தினராக உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், நாம் எவ்வாறான தயார்படுத்தல்களுடன் இருந்தாலும் இடர்கள் வரும்போது சில வேளைகளில் அவற்றைச் சமாளிக்க முடியாத நிலைமை ஏற்படும். 4 நாள்களில் சுமார் 500 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றது. சகல இடங்களும் வெள்ளக்காடாகியது. ஆனாலும், சில நாட்களிலேயே வழமைக்கு திரும்பும் வகையில் நீங்கள் அனைவரும் பணியாற்றியிருக்கின்றீர்கள்.

உங்கள் வீடுகள் வெள்ளத்தில் மூழ்க்கியிருந்தாலும் நீங்கள் நித்திரை முழித்து இரவிரவாக மக்களைப் பாதுகாக்க களத்தில் நின்றிருக்கின்றீர்கள். அப்படிச் செயற்பட்ட உங்களை பாராட்டி மதிப்பளிப்பது எமது கடமை. இது உங்களுக்கு உற்சாகமளிக்கும். சவால்களை நாம் சந்திக்கும் போதுதான் எமது சேவைகள் இன்னமும் மேம்படும்.

இந்த இடரிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் எமது நடவடிக்கைகளை இப்போதிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். நாம் அவற்றை மீளாய்வு செய்யவேண்டும். சரியான தீர்மானங்களை விரைந்து எடுக்கவேண்டும்.

தலைமைத்துவத்துக்கு அதுதான் அழகு. விரைந்து தீர்மானங்களை எடுக்கத் தவறினால் பிரச்சினைகளுக்குத்தான் முகம்கொடுக்கவேண்டியிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பருவகால மழைக்கு முன்னதாக வெள்ள வாய்க்கால்களை துப்புரவு செய்வதை எமது வருடாந்த செயற்றிட்டத்தில் உள்ளடக்குவதன் ஊடாக முன்னாயத்த நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்கலாம்.

இவர்கள் எமது மக்கள் என்ற அடிப்படையில் இந்த இடர் நடவடிக்கையின் போது சகல திணைக்களங்களும் செயற்பட்டன. அது வரவேற்கப்பட வேண்டியதுடன் தொடரவேண்டும் என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், மன்னார் மாவட்டச் செயலர் கே.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் ஆகியோரும், ஒவ்வொரு மாவட்டங்களினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Posts

தெல்தெனிய கொ*லை சம்பவம்; சந்தேகநபரின் திடுக்கிடும் வாக்குமூலம்.!

தெல்தெனிய கொ*லை சம்பவம்; சந்தேகநபரின் திடுக்கிடும் வாக்குமூலம்.!

by Mathavi
June 25, 2026
0

கண்டி, தெல்தெனியவில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை வைத்தியசாலையைச் சேர்ந்த பிசியோதெரபியின் மரணம், கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட கொலை என்பது பிரேதப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு ஜேர்மன் துணைத் தூதுவரிடம் ஊடகவியலாளர்கள் கோரிக்கை.!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு ஜேர்மன் துணைத் தூதுவரிடம் ஊடகவியலாளர்கள் கோரிக்கை.!

by Mathavi
June 25, 2026
0

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கும், அரசாங்கத்தால் கொண்டுவரப்பட உள்ள ஊடக சாசனத்தை நிறுத்துவதற்கான அழுத்தங்களை வழங்குமாறும் இலங்கைக்கான ஜேர்மன் துணை தூதுவர் சார...

ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க ஆகியோர் கைது.!

ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க ஆகியோர் கைது.!

by Mathavi
June 25, 2026
0

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச...

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஐந்து மாகாணங்களில் மொட்டுவின் ஆட்சியே.!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஐந்து மாகாணங்களில் மொட்டுவின் ஆட்சியே.!

by Mathavi
June 25, 2026
0

உரிய காலத்தில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தம்மால் வெற்றி பெற முடியும் என்ற பூரண நம்பிக்கை தங்களுக்கு இன்னும் ஏற்படவில்லை...

சுற்றுச்சூழல் என்ற பெயரில் மாகாண சபைகளின் அதிகாரங்களில் மத்திய அரசின் தலையீட்டை ஏற்க முடியாது.!

சுற்றுச்சூழல் என்ற பெயரில் மாகாண சபைகளின் அதிகாரங்களில் மத்திய அரசின் தலையீட்டை ஏற்க முடியாது.!

by Mathavi
June 25, 2026
0

சுற்றுச்சூழல் என்ற பெயரில் மாகாண சபைகளின் அதிகாரங்களில் மத்திய அரசின் தலையீடை ஏற்க முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கல்...

காக்கைதீவு குப்பை மேட்டில் பாரிய தீ விபத்து – சுமார் 200 குடும்பங்கள் பாதிப்பு!

by selvan
June 24, 2026
0

யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில்  ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200 க்கும்...

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

by selvan
June 24, 2026
0

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவினால் இன்று (24) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி,...

சாதாரண தர பரீட்சையில் இம்முறை  11,790 பரீட்சாத்திகள் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி

இவ்வாண்டு நடைபெற உள்ள பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் இல்லை!

by selvan
June 24, 2026
0

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். எனவே முன்னர்...

தேர்தல்களின் போது அழியா மை பயன்படுத்துவதை தவிர்த்தால் சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க முடியும்!

by selvan
June 24, 2026
0

தேர்தல்களின் போது வாக்களித்ததை உறுதிப்படுத்துவதற்காக விரலில் மை பூசும் முறையை நீக்குவதன் மூலம், ஒரு தேர்தலின் போது சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க...

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

by selvan
June 24, 2026
0

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (24) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 113 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் கிடைத்தன. இதன்படி,...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி