• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 14, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு – தமிழரசின் கிளிநொச்சி மாவட்டக் கிளை முடிவு..!

admin by admin
August 30, 2024
in இலங்கை செய்திகள்., கிளிநொச்சி செய்திகள்
0
தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு – தமிழரசின் கிளிநொச்சி மாவட்டக் கிளை முடிவு..!
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதென்ற தீர்மானம், கிளிநொச்சி மாவட்டக் கிளையில் இன்றைய தினம் (30) நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி – கிளிநொச்சி மாவட்டக் கிளையின் உபதலைவரும், வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சருமான தம்பிராசா குருகுலராஜா அவர்களின் தலைமையில், மாவட்டக் கிளை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற மேனாள் உறுப்பினர்களின் பங்கேற்போடு நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், நாளை மறுதினம் நடைபெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதனடிப்படையில், மத்திய செயற்குழுவுக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா அவர்களுக்கு நேரில் சமர்ப்பிக்கப்படவுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ;

எதிர்வரும் 2024.09.21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 9வது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், உள்நாட்டு தமிழ் வாக்காளர்களிடையேயும், புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மத்தியிலும், அரசியற் கட்சிகளுக்குள்ளும் எழுந்துள்ள பல்வேறு வாதப் பிரதிவாதங்களை ஆழமாகவும், விசாலமாகவும் கருத்தூன்றி ஆராய்ந்து, பொருத்தமான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய நிலைக்கு காலம் எம்மை நிர்ப்பந்தித்திருக்கிறது.

அதனடிப்படையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினராகிய நாங்கள், கட்சியினுடைய இணக்க விதிகளுக்கு உட்பட்டு, மாவட்டத்தின் பல்வேறு தரப்பினருடனும், சிவில் சமூகம் மற்றும் மதகுருமார்களுடனும், பொதுமக்களுடனும் அவ்வப்போது கலந்துரையாடி பெறப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில், 2024.08.30 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டக் கிளையாக ஒன்றிணைந்து, ஏகமனதாக எடுத்த கீழ்வரும் தீர்மானத்தை, மத்திய செயற்குழுவின் தழுவு அனுமதிக்காக தயவுடன் முன்னளிப்புச் செய்கின்றோம்.

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற நிலைப்பாட்டை பொறுப்போடு ஆராய்ந்து, நிகழ்கால இலங்கையினுடைய ஆட்புல ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், தமிழ் மக்களினுடைய இனத்தேசிய அடிப்படையில் நின்று பொருத்தமான உபாயம் ஒன்றை நாம் சிந்திப்பது காலத்தேவையானது என்று நம்புகின்றோம்.

போருக்குப் பிந்திய 15 ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில், எதிர்பார்க்கப்பட்ட நற்பலன்களை விட பிரதிகூலமான வெளிப்பாடுகளையே தமிழ்மக்கள் அனுபவிக்க நேர்ந்திருக்கிறது என்பது கசப்பானது எனினும் அதுவே உண்மையானது ஆகும்.

போர் ஒன்றின் பின்னராக தோல்வியடைந்த மனநிலையில் விடப்பட்ட தமிழ்ச்சமூகத்தை அதிலிருந்து மீட்டெடுக்கும் பணியையே எமது அரசியல் இயக்கம் பிரதான பணியாகக் கொண்டிருந்தது.

எனினும் உள்நாட்டுக்கு உள்ளேயும், சர்வதேச சமூகத்தோடு இணைந்தும், எமது இராஜதந்திர, புத்திபூர்வமான அணுகுமுறைகள் ஊடாகவும் எமது மக்களின் வலிகளுக்கு நிவாரணம் வழங்கவோ, அவர்களது நம்பிக்கையை கட்டியெழுப்பவோ இயலாதிருந்திருக்கின்றோம் என்பதை பொறுப்புடன் ஏற்றுக்கொள்ளுகின்ற சந்தர்ப்பம் ஒன்றை இந்தத் தேர்தல் எங்களுக்குத் தந்திருக்கின்றது.

கூருணர்வு மிக்க அரசியல் திறன், அணுகுமுறை மற்றும் சர்வதேச சமூகத்தின் வாஞ்சையைப் பெற்றுக்கொள்ளல் என்பதில் நிலைதளர்ந்து போயுள்ள சூழல் குறித்து தமிழ்த்தேசிய ஆர்வலர்களிடமும், அறிவுஜீவிகளிடமும், சாதாரண பொதுமக்களிடமும் எதிர்காலம் பற்றிய ஐயுறு நிலை அதிகம் வளர்ந்துள்ளமையை மக்கள் பிரதிபலித்து வருகிறார்கள் என்பதை எம்மால் உணர முடிகிறது.

மேற்படி இக்கட்டான சந்தர்ப்பம் ஒன்றில் போரின்போதும், போருக்குப் பின்னரும் நிகழ்ந்துவரும் இழப்புகளுக்கு பரிகாரம் காணவும், சர்வதேச அணுகுமுறைகளில் விருத்தியை ஏற்படுத்தவும், ஜெனிவாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களை வலுப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிலைமாறுகால நீதிச் செயற்பாட்டை வழிப்படுத்தவும், மீள நிகழாமையை வலியுறுத்தி தாயகத்தில் பொதுசன வாக்கெடுப்பு ஒன்றைக் கோரவும் முன்னகர்ந்து செல்லவேண்டிய தலைமைத்துவத்தை எமது மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.

அறிவுபூர்வமானது என்று நம்பப்படும் கருத்தியல்களுக்கும், எமது மக்களினுடைய உணர்வு நிலைகளுக்கும் இடையிலான போராட்டமாக இந்தத் தேர்தல்களம் விரிந்துள்ளமையால், மக்கள் எது சாத்தியம் என்று நம்புகின்றார்களோ, அவற்றைக் கவனமாக ஆராய்ந்து, தமிழ்த்தேசிய உணர்வுத் தளத்துடன் இணைந்த தீர்மானம் ஒன்றை, அதன் உயிர்நாடியாக விளங்குகின்ற இல்கைத் தமிழரசுக் கட்சி தீர்க்கமான முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே பெரும்பான்மைத் தமிழ் மக்களுடைய கருத்துநிலையாக உள்ளது என்பதை தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

மேற்படி விடயங்கள் ஒவ்வொன்றையும் மக்கள் மத்தியிலும், அரசியல் ஆர்வலர்கள் மத்தியிலும் பொதுசன அபிப்பிராயமாகப் பெற்று எமது மாவட்டக் கிளையும், பிரதேசக் கிளைகளும், உள்ளூராட்சி மற்றும் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களும் இணைந்து, கள யதார்த்தத்தின் அடிப்படையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய கொள்கை நிலைப்பாட்டைப் பாதுகாத்து, மக்கள் மத்தியில் எமது அரசியல் இயக்கம் நெருங்கிச் செயற்படும் வகையில் தாயகத்தின் சிவில் அமைப்புகளினாலும், தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள பெரும்பான்மைக் கட்சிகளினாலும் முன்மொழியப்பட்டுள்ள தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டுமென்ற ஏகமனதான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம் என்பதை தங்களுக்கு தயவுடன் அறியத்தருகிறோம் – என்றுள்ளது.

Related Posts

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

கோடாவுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 14, 2026
0

மஹபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொம்பகஹவத்த பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபர் நேற்று சனிக்கிழமை (13) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்...

நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்பப் பாடசாலையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்பப் பாடசாலையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

by Mathavi
June 14, 2026
0

நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்பப் பாடசாலையின் சுகாதாரமான சூழலை உறுதி செய்யும் நோக்கில், டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் நேற்று (13) மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது....

2029 இல் நாமலே ஜனாதிபதி.!

2029 இல் நாமலே ஜனாதிபதி.!

by Mathavi
June 14, 2026
0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது சிங்கள இனத்தின் மீது உண்மையான பற்றுக்கொண்டுள்ளார் என்றும், அவ்வாறு தன் இனத்தை நேசிக்கும் ஒருவராலேயே ஏனைய இனங்களையும் ஆதரிக்க முடியும்...

சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மட்டு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு.!

சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மட்டு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு.!

by Mathavi
June 14, 2026
0

புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனம், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர் தகவல்...

சுரேஷ் சலேவுக்கு மரண தண்டனை விதித்தாலும் எதிரொலிக்க மாட்டோம்.!

சுரேஷ் சலேவுக்கு மரண தண்டனை விதித்தாலும் எதிரொலிக்க மாட்டோம்.!

by Mathavi
June 14, 2026
0

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் விவகாரத்தில் தற்போதைய அரசு முற்றிலும் நீதியான முறையில் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்...

பதவிகளைக் காப்பாற்ற இரகசிய தேசிய மாநாடா? – ரெலோவின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி.!

பதவிகளைக் காப்பாற்ற இரகசிய தேசிய மாநாடா? – ரெலோவின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி.!

by Mathavi
June 14, 2026
0

ரெலோ (தமிழீழ விடுதலை இயக்கம்) அமைப்பின் தலைமைக்கு எதிராகப் பல மூத்த போராளிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், கட்சியின் தேசிய...

பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சடலம் மீட்பு.!

பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சடலம் மீட்பு.!

by Mathavi
June 14, 2026
0

மாவத்தகம, பரகஹதெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது...

புதையல் தோண்டிய மூவர் கைது.!

தொலைத்தொடர்பு கோபுர கேபிள்களை திருடிய சந்தேகநபர்கள் கைது.!

by Mathavi
June 14, 2026
0

ராகம பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள கேபிள்களை திருடிய சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 34 வயதுடைய ரத்துபஸ்வல மற்றும்...

கைகளைக் கழுவிக்கொண்டு உத்தமர்களாக வர நாங்கள் விடவே மாட்டோம்.!

கைகளைக் கழுவிக்கொண்டு உத்தமர்களாக வர நாங்கள் விடவே மாட்டோம்.!

by Mathavi
June 14, 2026
0

கடந்த காலங்களில் மனித உயிர்களை அழித்து, தங்களது கைகளை இரத்தத்தால் நனைத்துக் கொண்ட கொலையாளிகளும் ஊழல்வாதிகளும், மீண்டும் தங்களைக் கழுவிக்கொண்டு சமூகத்தின் முன்னால் உத்தமர்களைப் போல் வலம்...

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

நாய் மீது மோதிய மோட்டார் சைக்கிள்; ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
June 14, 2026
0

அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்துருகிரிய - கொடகம வீதியின் பனாகொட பகுதியில் பாதையைக் கடக்க முயன்ற நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி