லொறி ஒன்றுடன் மோதுண்டு 12 வயது மாணவன் பலியாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் சம்மாந்துறை – அம்பாரை பிரதான வீதியில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னால் இன்று (03) இடம்பெற்றுள்ளது.
குறித்த பல்கலைக்கழக பீடத்தின் பக்கத்திலிருந்து வீதியை கடந்து அடுத்த பக்கத்தில் உள்ள தமது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த குறித்த மாணவனை சம்மாந்துறை பகுதியில் இருந்து அம்பாறையை நோக்கி வந்த கென்டர் ரக வாகனம் மோதியதில் மாணவன் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார்.
இதன் போது சம்மாந்துறை பிரதான வீதி உடங்கா 02 இல் வசிக்கும் ஏ.எம்.பாஸீர் (வயது 12) எனும் மாணவன் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதுடன் லொரி செலுத்தி வந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான வாகனம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு மரணமடைந்த மாணவனின் உடல் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Related Posts
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(17) கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் சமத்துவ கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்றது. யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டதை அடுத்து கஞ்சி...
கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம்.!
கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் யாழ். மருத்துவ சங்கம் மற்றும் மருத்துவ பிரதிநிதிகள் சங்கம் ஆகியன இணைந்து நடாத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று (17)...
தேசியத் தலைவரால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பொன்னாலை மண்ணில் நினைவேந்தல்.!
தேசியத் தலைவர் என்று தமிழ் மக்களால் போற்றப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த வட்டுக்கோட்டை - பொன்னாலையில் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது...
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கோரி போராடி வந்த தாய் உயிரிழப்பு.!
மட்டக்களப்பு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்துடன் இணைந்து, வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கோரி பல ஆண்டுகளாக போராடி வந்த...
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!
கல்கிஸ்சை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹுலுத்தாகொடை வீதி பகுதியில் நேற்று சனிக்கிழமை (16) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பெருமளவிலான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர்...
மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு.!
கொடவெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலுகொல்ல பகுதியில் நேற்று சனிக்கிழமை (16) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலுகொல்ல - கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 69...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ஆறாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (17) மன்னார் பிரதான பேருந்து நிலைய பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் ஈழ போரின் வலி...
முள்ளிவாய்க்காலில் எம் இனத்தின் செந்நீரை பாய்ச்சி உயிரை பறித்தார்கள்.!
வாய்க்கால் வரப்பு வழியே நீர்பாய்ச்சி பயிர் வளர்ப்பார்கள். ஆனால் முள்ளிவாய்க்காலில் எம் இனத்தின் இரத்தத்தையும் செந்நீரையும் பாய்ச்சி உயிரை பறித்தார்கள் என தென்னிந்திய பிரபல இயக்குனர் ரி.ராஜேந்தர்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!
பரந்தாமன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு - கற்சிலை மடுவில் நேற்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஈகை சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தப்பட்டு, மலர்தூவி உயிரிழந்த உறவுகளுக்கு...
மலையக மக்களின் காணி உரிமைக்கான கொள்கைப் பிரகடனமும் ‘நிலமே எங்கள் நிலைக்களம்’ நாடக அரங்கேற்றமும்.!
மலையக மக்களின் காணி உரிமையை வலியுறுத்தி, சங்கு கலைக்கழகம் (SANGU SKK) மற்றும் சிட்ப்ஸ் (SIDPS) நிறுவனம் இணைந்து தயாரித்த கொள்கைப் பிரகடனம் வெளியீட்டு விழா, கடந்த...










