• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கடல் வழியாக கடத்தப்பட்ட 7 .70 கிலோ தங்கம் பறிமுதல்!

Thinakaran by Thinakaran
January 5, 2024
in இந்திய செய்திகள், இலங்கை செய்திகள்.
0
Share on FacebookShare on Twitter

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் கடத்தி செல்லப்பட்ட 4.50 கோடி ரூபாய் பெறுமதியான 7.70 கிலோ தங்கம் திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளால் தங்கச்சிமடம் அடுத்த தர்கா பஸ் நிலையம் அருகே வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதிகாரிகளை தாக்கி விட்டு தப்பிச் சென்ற நபரை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இலங்கையில் இருந்து சமீப காலமாக அதிக அளவு கடத்தல் தங்கம் நாட்டுப் படகுகளில் தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் கடத்திச் செல்லப்படுகிறதாம்.

இந்நிலையில் திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நேற்று (04) இரவு இலங்கை தலைமன்னாரிலிருந்து கடல் வழியாக நாட்டுப்படகில் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுக கடற்கரைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் துப்பாக்கியுடன் மறைந்திருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகம் அருகே வந்து நின்ற நாட்டு படகில் இருந்து மர்ம நபர் ஒருவர் தங்கக் கட்டிகள் கொண்ட பார்சலை கரையில் நின்று கொண்டிருந்த நபரிடம் கொடுத்து விட்டு மீண்டும் படகில் புறப்பட்டு சென்றார்.

கடத்தல் தங்க கட்டிகளை பெற்று கொண்ட நபர் இருசக்கர வாகனத்தில் அதை எடுத்துக்கொண்டு ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் தர்கா ஸ்டாப் அருகே சென்று கொண்டிருக்கும் போது அவரை பின் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் வருவதை அறிந்த அந்த நபர் இருசக்கர வாகனத்தை அவ்வழியாக சென்ற முச்சக்கரவாகனத்துடன் மோதி விட்டு தப்பிக் முயன்றுள்ளார். இதனை கண்ட அதிகாரிகள் அவரை மடக்கி பிடிக்க முயன்ற போது அதிகாரியை தள்ளிவிட்டு விட்டு இரு சக்கர வாகனத்தை போட்டு விட்டு தப்பி சென்றார்.

இதையடுத்து அந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது வாகனத்தின் முன் பகுதியில் உள்ள பையில் தங்க கட்டிகள் இருந்தது, தங்க கட்டிகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்தச் சென்று நிறுத்து பார்த்ததில் அதில் சுமார் 7.70 கிலோ தங்கம் இருந்தது தெரிய வந்தது.

சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடத்தல் தங்கத்தை விட்டு சென்ற நபர் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஐசக் என்பது தெரிய வந்துள்ளதாகவும் அவரை தீவிரமாக தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 4.50 கோடி ரூபாய் என்றும், கடத்தல் தங்கம் யாருக்காக கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை திருச்சியில் உள்ள மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு தலைமை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: .70indianlocalnewstamilஇந்தியாவிற்குஇலங்கையிலிருந்துகடத்தப்பட்டகடல்கிலோதங்கம்பறிமுதல்வழியாக

Related Posts

சிறுவனைத் தாக்கிய நால்வர் கைது.!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி; ஆறு பெண்கள் கைது.!

by Mathavi
June 21, 2026
0

கொழும்பு – பம்பலப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், மூன்று தாய்லாந்து பெண்கள் உட்பட ஆறு பெண்கள்...

சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்புப் போராட்டம் உண்மையில் ஓர் அர்த்தமற்ற நாடகமே.!

சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்புப் போராட்டம் உண்மையில் ஓர் அர்த்தமற்ற நாடகமே.!

by Mathavi
June 21, 2026
0

"சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்புப் போராட்டம் முற்றிலும் அர்த்தமற்ற ஒன்றாகும். ஒரு முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பிரதானியாக அவர் குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கக்கூடாது." -...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரம் ஒட்டுமொத்த நாட்டுக்குரியது.!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரம் ஒட்டுமொத்த நாட்டுக்குரியது.!

by Mathavi
June 21, 2026
0

"காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னமும் அந்தத் துயரமான துன்பத்தில் இருந்து மீளாத மக்களாகவே வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு நஷ்டஈடாக வெறும் பணத்தை வழங்குவதன் மூலமாக இந்த மன...

மகாராஷ்டிராவில் இந்துக் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்த்தில் 4 பேர் பலி!

by selvan
June 21, 2026
0

மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அனுமன் கோயில் வளாகத்தின் புதிய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் 30-க்கும்...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன பிரஜை கைது.!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன பிரஜை கைது.!

by Mathavi
June 21, 2026
0

சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் (13.2 மில்லியன்) பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடத்தி வர முயன்ற வெளிநாட்டு பயணி ஒருவர்,...

இந்தியாவில் இன்று நீட் மறுத்தேர்வு !

இந்தியாவில் இன்று நீட் மறுத்தேர்வு !

by selvan
June 21, 2026
0

இந்தியா முழுவதும் 551 நகரங்களிலும்  வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நீட் மறுத்தேர்வு இன்று நடைபெறுகிறதுசுமார் 23 இலட்சம் மாணவர்கள்  நீட் மறுத்தேர்வு எழுத தகுதி பெற்றனர்.முறைகேடுகளை தடுப்பதற்காக...

தேசிய புத்தாக்க விருதுப் போட்டியில் சாதித்த ‘SLIIT Northern Uni’ மாணவர்கள்.!

தேசிய புத்தாக்க விருதுப் போட்டியில் சாதித்த ‘SLIIT Northern Uni’ மாணவர்கள்.!

by Mathavi
June 21, 2026
0

வருடந்தோறும் தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்குநர்களையும், புத்தாக்கங்களையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் புகழ்பெற்ற தேசிய விருதை, SLIIT Northern Uni தகவல் தொழில்நுட்ப மாணவர்கள் இம்முறை தமதாக்கிக்...

திடீர் சோதனையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள்.!

திடீர் சோதனையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள்.!

by Mathavi
June 21, 2026
0

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தொடர் திடீர் சோதனை நடவடிக்கையில் 42 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை (19)...

வட இலங்கை சங்கீத சபை நடாத்திய 27ஆவது கலா வித்தகர் பட்டமளிப்பு விழா.!

வட இலங்கை சங்கீத சபை நடாத்திய 27ஆவது கலா வித்தகர் பட்டமளிப்பு விழா.!

by Mathavi
June 21, 2026
0

வட இலங்கை சங்கீத சபை நடாத்திய 27ஆவது கலா வித்தகர் பட்டமளிப்பு விழாவானது நேற்றையதினம் மருதனார்மடத்தில் உள்ள வட இலங்கை சங்கீத சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் நாடு முழுவதும் 22 ஆயிரம் முறைப்பாடுகள்.!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் நாடு முழுவதும் 22 ஆயிரம் முறைப்பாடுகள்.!

by Mathavi
June 21, 2026
0

இலங்கை முழுவதும் கிட்டத்தட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய 22 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன என்றும், அதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் 6 ஆயிரம் முதல்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி