டெங்குப் பெருக்கம் – காரணமானோருக்கு எதிராக வழக்கு.!!

0

யாழ்.சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 13 பேரிற்கு டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கெதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

IMG 20240201 WA0081

IMG 20240201 WA0088

தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு வாரத்தில் சண்டிலிப்பாய் MOH பிரிவிற்குட்பட்ட பகுதியில், அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசங்களான ஆனைக்கோட்டை, மானிப்பாய் மற்றும் சுதுமலை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுகளில்,  மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வேலுப்பிள்ளை ரதீசன்  அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் போது,  களத்தரிசிப்பில் ஈடுபட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான ரா.யொனி  பிரகலாதன், சு.ஜெகதாசன், கி.அஜந்தன், கு. பாலேந்திரகுமார் ச.பிறின்சன் ம.ஜெயபிரதீப் ஆகியோரினால்,
நுளம்புபெருகும் சூழலைப் பேணியதாக இனங்காணப்பட்ட 13 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக இன்றையதினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது ரூ.16500 தண்டப்பணமாக அறவிடப்பட்டதுடன், இனிவரும் காலங்களில் இவ்விதம் நடந்துகொண்டால் ஆறுமாத சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என்றும் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

அத்துடன் இருவரிற்கெதிராக நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
IMG 20240201 WA0086

IMG 20240201 WA0084

Leave A Reply

Your email address will not be published.