இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

0 8

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் நேற்றிரவு 23 இந்திய மீனவர்கள், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு வைத்து நீரியல்வள திணைக்களத்திடம் பாரதீனப்படுத்தப்பட்டனர்.
IMG 20240204 WA0214
பின்னர் 23 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாக யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திரு.சுதாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.