Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: விளக்கமறியல்
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூக்கு எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பை அனுமதியின்றி பதிவு செய்து, அந்த தொலைபேசி உரையாடலை யூடியூபில் பதிவேற்றம் செய்து, பொது பாதுகாப்புக்கு எதிராக தவறு செய்ய தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஒருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின் கமகே நேற்று உத்தரவிட்டுள்ளார். தொலைபேசி உரையாடலில் பதிவை யூடியூப்பில் பதிவேற்றம் செய்து, பொது அமைதியை சீர்குலைக்கும் விதமான குற்றத்தை செய்தமை […]
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் நேற்றிரவு 23 இந்திய மீனவர்கள், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது அவர்கள் பயணித்த…
முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று…
நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம்…
நெடுந்தீவில் 6 பேர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊற்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார். நெடுந்தீவில் ஆறு பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நேற்று (நவம்பர் 1) சந்தேக நபர் முற்படுத்தப்பட்டு வழக்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கொலை செய்யப்பட்டவர்களது உறவினர்களும் மன்றில் பிரசன்னமாகியிருந்ததுடன் மேலதிக விசாரணைகள் எதுவுமின்றி சந்தேகநபரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்னர். கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி நெடுந்தீவில் 06 முதியவர்களை படுகொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 51 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொலையானவர்களின் நகைகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் கொலைக்கென பயன்படுத்திய கத்தி என்பன கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்கொலைகள் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்கள் முடிவுற்ற நிலையில் தொடர்ந்து […]