Browsing: ரணில்

எதிர்வரும் இருபது வருடங்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமே இந்நாட்டில் பதவியில் இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து கருத்துரைத்த அவர்; ”எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமோக வெற்றியீட்டுவார். இலங்கை வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக்கொண்டவர் என்ற புதிய […]

சுகாதார சேவைகளுடன் தொடர்புடைய பல சேவை நடவடிக்கைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இது வெளியிடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, மருத்துவமனைகள், நேர்சிங் ​ஹோம்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, பாதுகாப்பு, போசனை ஊட்டல் மற்றும் சிகிச்சை தொடர்பாக தேவைப்படும் அல்லது செய்ய வேண்டிய அனைத்து சேவைப் பணிகள் அல்லது உழைப்பு அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (07) பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. பாராளுமன்றத்தின் புதிய அமர்வின் ஆரம்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது விஞ்ஞாபனத்தை சமர்ப்பித்த பின்னர் சுமார் ஒரு மணிநேரம் இருவரும் கலந்துரையாடியுள்ளனர். இந்த நிகழ்வில் வேறு எவரும் கலந்து கொள்ளவில்லை, மேலும் என்ன பேசப்பட்டது என்பது வெளியிடப்படவில்லை.

07ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரணில் விக்கிரமசிங்க இன்று (08) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுள்ளார். இந்த மாநாடு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் 09 முதல் 10 வரை நடைபெற உள்ளது. இந்திய அறக்கட்டளை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி வெளியேறியிருந்தார். ஜனாதிபதியுடன் தூதுக்குழுவொன்றும் சென்றுள்ளதுடன், அவர்கள் முதலில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (08) அதிகாலை 12.45 மணிக்கு சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு SK-469 சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டு […]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆஸ்திரேலியாவுக்கு நாளை பயணம் மேற்கொள்கின்றார். ஆஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெறவுள்ள 7 ஆவது இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கின்றார். பெப்ரவரி 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெறும் குறித்த மாநாட்டில் ஜனாதிபதி சிறப்புரையாற்றவுள்ளார். அத்துடன், இவ்விஜயத்தின்போது ஆஸ்திரேலிய பிரதமர் அந்தனி அல்பானீஸி மற்றும் வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் ஆகியோருடனும் ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார்.