Browsing: அஸ்வெசும

அஸ்​வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஒரு மாத காலத்திற்கு அந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 4 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க “அத தெரண” வினவிய போது பதிலளித்தார். நிவாரண விண்ணப்பம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க விளக்கமளிக்கையில், […]

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் இராஜாங்க நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையில் இன்று (13.02.2024) நடைபெற்றது. கொழும்பு – 01 இல் அமைந்துள்ள நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் புதிய கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்  கலந்துக்கொண்டார். அஸ்வெசும நலன்புரி திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னேடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த திட்டத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகளை இம்மாதம் 15ஆம் […]

நாடளாவிய ரீதியில் 4 இலட்சம் புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி இன்று (10) ஆரம்பமாகவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது . இந்த திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களுக்கு ஏப்ரல் முதலாம் திகதி முதல் கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அந்த வகையில் அஸ்வெசும பயனாளிகளை தெரிவு செய்யும் போது பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் சில நிபந்தனைகளை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]