Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: முன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட இரணைப்பாலை கிராமத்தில் 12.02.2024 நேற்று பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்ததினால் உயிரிழந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 வயது பூர்த்தியாகாத உயர்தர வகுப்பு மாணவியான நிதர்சினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வீட்டில் பெற்றோர்கள் உறவினர்கள் இல்லாத நிலையில் குறித்த மாணவி தனது அறைக்குள் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்ற நிலையில் […]
குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் மாத்தறை பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக இன்று (13) காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணம். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் அங்கு வந்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குடிவரவு திணைக்களத்தின் மாத்தறை பிராந்திய காரியாலயத்திற்கு கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக நாளாந்தம் ஏராளமானோர் வருகின்றனர். இந்த அலுவலகத்தில் இருந்து ஒரு நாள் சேவையின் கீழ் சுமார் 150 பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன. எனினும் கடவுச்சீட்டு வழங்குவதற்கான முறையான […]
வாதுவை, பொத்துப்பிட்டிய காலி வீதி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (13) பகல் இடம்பெற்றுள்ளது. களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவைச் சேர்ந்த தீயணைப்பு வீர்ரகள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
பொலிஸாரின் புதிய புள்ளிவிபரங்களின் பிரகாரம், போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்கள் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஆர்வம் கொண்டு, இணைந்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பொன்றை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நேரத்தில் அது நடத்தப்படும் என்றும், பொதுத் தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு என்றும், தேவையான சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணையத்துடன் அரசு இணைந்து செயல்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கல்வி அமைப்பில் செயற்கை நுண்ணறிவு கற்கை நெறியை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 02.10.2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொடர்பான தேசிய மூலோபாயம் மற்றும் திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பணிக்குழு அளித்த பரிந்துரைகளின்படி கற்கை நெறி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அந்த முன்னோடித் திட்டங்களின் ஒரு பிரிவாக சாதாரண கல்வி முறைமையில் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்துவதற்கான செயற்திட்டம் அமுல்படுத்தப்படும். மைக்ரோசொப்ட் ஆதரவுடன் கீழ்க்கண்டவாறு முன்னோடித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. * தேசிய […]
எதிர்வரும் காலங்களில் நாட்டில் காணி விலைகள் குறைவடையும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். காணி உரிமையற்ற இருபது லட்சம் பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் காணிகளுக்கான கேள்வி வீழ்ச்சியடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் நாட்டில் காணிகளுக்கு நிலவி வரும் செயற்கை விலை அதிகரிப்பு குறைவடையும்.. எதிர்காலத்தில் காணி விலை, கடை வாடகை, வீட்டு வாடகை என்பன குறையும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். காணி வளத்தை உச்ச அளவில் பயன்படுத்தும் நோக்கில் அரசாங்க […]
2023 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை தற்போது இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டு தரம் 6க்கான மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்களை இணையவழி மூலம் 13.02.2024 முதல் 29.02.2024 வரை சமர்ப்பிக்க முடியும். கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk க்கு பிரவேசிப்பதன் ஊடாக மூன்று பாடசாலைக்காக மேன்முறையீடு […]
அரச பேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. துணுக்காயிலிருந்து காரைநகர் நோக்கி பயணித்த அரச பேருந்து எதிரே பயணித்த இராணுவ ரக் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. விபத்துக்குள்ளான இராணுவ வாகனம் குடைசாய்ந்ததில் 4 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதுடன், பேருந்தில் பயணித்த பெண் […]