Browsing: முன்

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. வானில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் குழந்தையொன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னால் திரும்பிய மோட்டார் சைக்கிளை முட்டி தள்ளி வீதியை விட்டு விலகி காணிக்குள் புகுந்தது அரச பேருந்து யாழ்ப்பாணம் – தென்மராட்சி –  A 9 வீதி, நாவற்குழி பகுதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 4.15 மணியளவில் இடம்பெற்றது. A9 வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் திரும்ப முற்பட்டபோது பின்னால் பயணித்த அரச பேருந்து அதனை முட்டி தள்ளியதோடு பாதையை விட்டு விலகி காணிக்குள் புகுந்துள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிளுக்கு சேதங்கள் […]

அரச பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த விபத்து இன்று மாலை யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

புதிய கிராம சேவையாளர்களுக்கான நேர்முகப் பரீட்சை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதிதாக 2,100 கிராம சேவையாளர்களை கடமையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கிராம சேவையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான போட்டிப் பரீட்சை அண்மையில் நடைபெற்றதாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த குறிப்பிட்டுள்ளார் . இதில் பங்கு பற்றியவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில் நேர்முகப்பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய நடனம், இசை, நாடகம் மற்றும் நாடகம் மற்றும் வீட்டுப் பொருளாதாரப் பாடங்களுக்கான நடைமுறைத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நடனம் மற்றும் இசை பாடங்கள் தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள் இம்மாதம் 20ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. நாடகம் மற்றும் நாடகக் கலைகள் மற்றும் வீட்டுப் பொருளாதாரம் பாடங்களுக்கான நடைமுறைத் தேர்வுகள் இம்மாதம் 27ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி […]

அரச சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் வழங்கப்படாததன் காரணமாக தேசிய பாடசாலைகளுக்கு 54 அதிபர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். சுயாதீன ஆணைக்குழுவிற்கு ஓய்வுபெற்ற நபர்களை நியமித்ததன் மூலம் அதன் பணி வினை திறனற்றதாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 6 மாதங்களாக முயற்சித்து வருகிறோம், பொதுச் சேவை ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கவில்லை அதனை வர்த்தமானியில் வெளியிட.எனவே இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டாலும் ஓய்வு பெற்றவர்களை நியமித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண […]

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை 2024 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை டிசம்பரில் நடைபெறும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ள பொது ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் மின்சார கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை (15) முதல்பொது மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பொது மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டதன் பின்னர் ஆணைக்குழு ஒன்றுகூடி கட்டணத்தை குறைப்பதற்கு […]

நுண்நிதிய கடன் பிரச்சினையால் கிராமப்புறங்களில் சுமார் 28 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 முதல் 48 சதவீதம் என்ற அடிப்படையில் அதிக வட்டிக்கு கடன் வழங்கப்படுகிறது. நுண்கடன் திட்டங்களினால் பெண்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கை பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்வதற்கு நுண்கடன் திட்டங்கள் பிரதான காரணியாக அமைந்துள்ளது எனப் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் நுண்நிதிய பிரச்சினை காரணமாகப் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார […]

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் இராஜாங்க நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையில் இன்று (13.02.2024) நடைபெற்றது. கொழும்பு – 01 இல் அமைந்துள்ள நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் புதிய கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்  கலந்துக்கொண்டார். அஸ்வெசும நலன்புரி திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னேடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த திட்டத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகளை இம்மாதம் 15ஆம் […]