Browsing: {படங்கள்}

முன்னால் திரும்பிய மோட்டார் சைக்கிளை முட்டி தள்ளி வீதியை விட்டு விலகி காணிக்குள் புகுந்தது அரச பேருந்து யாழ்ப்பாணம் – தென்மராட்சி –  A 9 வீதி, நாவற்குழி பகுதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 4.15 மணியளவில் இடம்பெற்றது. A9 வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் திரும்ப முற்பட்டபோது பின்னால் பயணித்த அரச பேருந்து அதனை முட்டி தள்ளியதோடு பாதையை விட்டு விலகி காணிக்குள் புகுந்துள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிளுக்கு சேதங்கள் […]

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (14.02.2024) பிற்பகல் 12 மணிக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அபிவிருத்தி குழு தலைவர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கரைதுறைப்பற்று பிரதேச சபை பிரதேச செயலாளர் ம.உமாமகள்  பாராளுமன்ற உறுப்பினர்களது பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள், பிரதேச சபையின் செயலாளர், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள்,  கிராம சேவையாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் […]

இன்று மதியம் 12.மணிக்கு நல்லதண்ணி நகரில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த யாத்திரியர்களை ஏற்றிக் கொண்டு மஸ்கெலியா வழியாக ஹட்டன் சென்ற அரச பேருந்து இடையில் பயணிகள் ஏற்றியமை பற்றி தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கும் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் அரச பேருந்தில் பயணித்த காலி பகுதியில் உள்ள இளைஞர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கும் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு […]

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக நாட்டுக்கு அந்நிய செலாவனியை பெற்றுத்தரும் சுற்றுலா துறையானது மிகவும் நலிவடைந்து உள்ளது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நூற்றுக்கணக்கான பிளமிங்கோ என சொல்லப்படும் வெளிநாட்டு பறவைகள் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளது டன் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கி வருகிறது. தமிழில் இப்பறவை பெரும் பூநாரை என அழைக்கப்படுகிறது. இந்த பறவைகள் ஆழமற்ற ஏரிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மணல் […]

இலங்கையின் முதலாவது மிதக்கும் ஹோட்டல் நீர்கொழும்பில் திறக்கப்படவுள்ளது. மார்ச் 1, 2024 அன்று நீர்கொழும்பின் பொலகல பகுதியில் “அக்ரோ ஃப்ளோட்டிங் ரிசார்ட் ( Bolagala Agro Floating Resort )” திறக்கப்படவுள்ளது. 13 ஏக்கர் நீர்பரப்பில், சுற்றுச்சூழலுக்கு உகந்த (eco friendly) 31 கபனாக்களை உள்ளடக்கியதாக திறக்கப்படும் இக் ஹோட்டல் இலங்கையின் முதலாவது மிதக்கும் ஹோட்டலாகும்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன. இந்த விடயம் தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது. இதன்போது குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையிலேயே நேற்று காலை 6 மணிமுதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் […]

வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக பிரிவின் பிரதேச செயலாளர் மக்கள் சந்திப்பாக உரும்பிராய் தெற்கு கிராமத்தில் உள்ள செல்வபுரம் யோகபுரம் கிராமத்தை சேர்ந்த கிராம மட்ட அமைப்புக்கள், மக்கள்  ஆகியோரை செல்வபுர உதயசூரியன் பொதுமண்டபத்தில் நேற்று  14.02.2024 சந்தித்தார். இதில் பிரதேச செயலாளர் சிவசிறி ஐயா, உதவி பிரதேச செயலாளர், நிர்வாக கிராம அலுவலர், விளையாட்டு அலுவலர், இளைஞர் கழக அலுவலர் சிறுவர் பிரிவு அலுவலர்கள், பிரதேச செயலக அலுவலர்கள், கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸ் மக்கள் […]

உலக காதலர் தினத்தினை முன்னிட்டு நாளை தினம் காதலர்கள் தமது காதல் பரிசினை கையளிப்பதற்காக காதல் பொருட்களை மிகவும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர் அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் காதலர்கள் காதல் பரிசினை தத்தமது காதலர்கள்,காதலிகள் தமது அன்பு காதல் பரிசினை கையளிப்பதற்கு பொருட் கொள் வனவில் கையளிப்பதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். யாழ்ப்பாண மாநகர உள்ளிட்ட கடைத் தொகுதி யிலும் இவ் வாறான பொருட்கள் கொள்வனவு செய்வதில் ஆர்வம் இன்று காட்டியுள்ளனர்.

போதைப் பொருளுக்கு எதிரான போராட்டம் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. “போதைப் பொருள் பெருந்தீமையிலிருந்து எம்மையும், எமது சந்ததியினரையும் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தில் யாழ் மாவட்ட சர்வமத பேரவை தலைவர் சிவஸ்ரீ கிருபானந்த குருக்கள், செயலாளர் அருட்பணி இ.ராஜ்குமார், யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர், மௌலவி வி.ஏ.எஸ்.சுபியான் உள்ளிட்ட சில […]

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் சுகாதார பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இடம்பெற்றது. 72 சுகாதார தொழிற்சங்கங்களைச் சேர்ந்த  ஊழியர்கள் இன்று(13) காலை 6.30 முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது