Browsing: முக்கிய

7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவுஸ்ரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு நேற்று (10) விஜயம் செய்தார். தூதரகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை கொன்சல் ஜெனரல் கலாநிதி ரொஷ் ஜலக்கே மற்றும் திருமதி பிரியங்கா கமகே ஆகியோர் வரவேற்றனர். அதன் பின்னர், கொன்சல் ஜெனரல் மற்றும் ஊழியர்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக உரையாடியதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் அவர்கள் ஆற்றக்கூடிய செயலூக்கமான […]

புதிய களனி பாலம் நாளை அதிகாலை 5 மணி வரை மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருத்தப் பணிகள் காரணமாக பாலம் நேற்று முன்தினம் 9 மணி முதல் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், கொழும்பில் இருந்து கட்டுநாயக்கவை நோக்கியும், கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கியும் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், துறைமுகத்தை நோக்கி பயணிக்க முடியாது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து மருந்து விற்பனை  மற்றும் கொள்வனவு நிறுவனங்களையும் விசாரிக்கும் பணியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. குற்றப்புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அண்மையில் மருந்து கொள்வனவு செய்த நிறுவனங்கள் மற்றும் அதனுடைய தொடர்புடையவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஹியுமன் இம்யூனோகுளோபுலின் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மேற்படி கூட்டத்தில் ஆராயப்பட்டதோடு, பொலிஸார் […]

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 1 முதல் 4  செல்சியஸினால் அதிகரித்துள்ளது. புத்தளத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன்படி, புத்தளத்தில் 33.7 செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரியில் 33.5 செல்சியஸ் ஆக வெப்பநிலை பதிவாகியது. கட்டுநாயக்கவில் வெப்பநிலை 33.4 செல்சியஸாக உயர்ந்துள்ளது. அடுத்த மாதம் வெப்பமான காலநிலை மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நீர்கொழும்பு – கல்கந்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.

நேற்று 09, ம் திகதி இன்று 10, ம் திகதி சனிக்கிழமை என்பதால் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய அதிக அளவில் ஹட்டன் வழியாகவும் இரத்தினபுரி காவத்த வழியாகவும் யாத்திரியர்கள் வந்த வண்ணம் உள்ளனர் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார். சுமார் ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது பக்தர்களின் வருகை. நல்லதண்ணி மரே நெடுஞ்சாலையில் மற்றும் நல்லதண்ணி மஸ்கெலியா நெடுஞ்சாலையில் ரக்காடு கிராமம் வரை தற்போது வாகனங்கள் வீதியின் இரு பக்கங்களிலும் […]

சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பல்வேறு வழக்குகள் தொடர்பாக பிணை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், பல்வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவர் சிறையில் இருக்க வேண்டியுள்ளது. இம்ரான் கானைத் தவிர, பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியும் 13 குற்றச்சாட்டுகளில் பிணை பெற்றுள்ளார், ஆனால் அவர் சிறையில் இருக்க வேண்டும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மன்னார் வங்காலை கடல் பகுதியில் அரிய வகை ஆமை ஒன்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் இன்று (10) வங்காலை கடற்படையினரால் கைது செய்யப்படுள்ளனர் குறித்த அரிய வகை ஆமை கடல்பகுதியில் பிடிக்கப்பட்டு இறைச்சிக்காக கரையை நோக்கி கொண்டு வந்த நிலையில் படகில் இருந்த மூன்று மீனவர்களையும் கடற்படை கைது செய்துள்ளதுடன் மன்னார் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர்களை ஒப்படைத்திருந்தனர்.   இந்த நிலையில் மூவரையும் முதல் கட்ட விசாரணைகளின் பின்னர் மன்னார் […]

நேற்று நடைபெற்றுள்ள யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் நடைபெற்றுள்ள ஹரிகரன் ஸ்டார் நைட் இசை நிகழ்ச்சியில் இந்திய சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பின்னணிப்பாடகர் ஹரிகரன் தனது முகநூல் பதிவில், உங்கள் அதீத அன்பும் ஆதரவும் இசையின் ஒருங்கிணைக்கும் சக்தியை உண்மையிலேயே வெளிப்படுத்தியது. ஒன்றாக, நாங்கள் நல்லிணக்கத்தையும் இணைப்பையும் கொண்டாடினோம். இந்த நிகழ்வை ஒழுங்கமைப்பதில் அபார முயற்சி செய்த கலாமாஸ்டர்  மற்றும் இந்திரகுமார் பத்மநாதன் அவர்களுக்கு சிறப்பு நன்றி. ஒவ்வொரு கணத்திற்கும் நன்றி என […]

ஆசிரியர்களுக்குப் பணம் வசூலித்து பரிசுகளை வழங்குபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு பரிசு வழங்குவதை தடை செய்து சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ள போதிலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதுடன் இது போன்ற பரிசுகளை ஆசிரியர்கள் பெறுவதும் தவறு என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.