Browsing: முக்கிய

தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் இலங்கையிலேயே வசூலிக்கப்படுவதாக Verité Research நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மின்சார கட்டணம் 3 மடங்கு அதிகமாக உள்ளதென அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதாரம் மற்றும் தொடர்புபட்ட பகுப்பாய்வுத் தகவல்களை வழங்கும் இலங்கையின் பிரபல நிறுவனமான public finance.lk-வின் பகுப்பாய்வு அறிக்கையில், 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உள்ளூர் மின்சார பாவனையாளர்கள் 100, 200, 300 அலகுகளை பயன்படுத்தியபோது செலுத்தியுள்ள கட்டணம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இதன் பகுப்பாய்வின் […]

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களின் உடலில் விஷம் பரவிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் அதிகாரிகளால் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு பொலிஸ் நிலையத்திற்கு வந்த ஒருவர் வழங்கிய பால் பக்கெட்டை பருகிய பின்னர் […]

கிளிநொச்சி மாவட்ட விவசாய குழு கூட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட விவசாய பணிப்பாளர், கமநல சேவை திணைக்களத்தினர், நீர்ப்பாசனத் திணைக்களத்தினர், விவசாய அமைப்புக்கள் உள்ளிட்டவற்றின் அதிகாரிகள், பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். கலந்துரையாடலில் 2024 ஆம் ஆண்டுக்கான சிறு போக செய்கையில் 100% வெற்றியாக முன்னெடுக்க வேண்டும். தற்பொழுது குளங்களின் நீர்மட்டம் அடைவு மட்டத்தில் காணப்படுவதன் காரணமாக உரிய காலத்தில் சிறுபோக செய்கை […]

சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகள் மூலம் கர்ப்பிணிபெண்களுக்கு மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் கல்சியம் மற்றும் விட்டமின்களுக்கு கடுமையான பற்றாக்குறை தொடர்வதாக தாய்மார்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல மாதங்களாக தமக்கு கல்சியம் மாத்திரைகள் கிடைக்கவில்லை என தாய்மார்கள் குற்றம் சாட்டுவதோடு தாய்மார்கள் விட்டமின்கள், கல்சியம் மற்றும் மருந்துகளை வெளியில் இருந்து வாங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேலை மாற்றம் முடிந்த பிறகு தங்கள் முதலாளிகளிடமிருந்து வரும் நியாயமற்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளைப் புறக்கணிக்கும் உரிமையை உறுதிப்படுத்த புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்டத்தை மீறும் முதலாளிகளுக்கு எதிராக அபராதம் விதிக்க ஏற்பாடுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுவதோடு,. நாட்டின் தொழில்துறை தொடர்பான பல சட்டங்களில் திருத்தம் கொண்டு வர திட்டமிடப்பட்டு, அதன் கீழ் “துண்டிக்கும் உரிமை” என்ற புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய சட்டம் ஊழியர்களுக்கு வேலை-வாழ்க்கை சமநிலையில் இருக்க […]

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வை முன்னிட்டு தென்னிந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். குறித்த குழு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது கலை கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.குறித்த இசைநிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் பிரபல தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் உள்ளிட்ட ஏற்பாட்டுகுழு நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். […]

கடற்படை மற்றும் மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் 02 சந்தேகநபர்கள் (ஆண் மற்றும் பெண்) 1200 Pregabalin மாத்திரைகளை விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த  நிலையில் சிலாவத்துறை நானாட்டன் பகுதியில்  கைது செய்யப்பட்டுள்ளனர்.  நேற்றுமுன்தினம் 07.02.2024 சிலாவத்துறை நானாட்டான் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பை கடற்படையினர் மேற்கொண்டனர் இந்த சுற்றிவளைப்பின் போது  நானாட்டான் பகுதியில் சந்தேகத்தின் பேரில் 02 நபர்களை சோதனையிட்டதுடன்  சந்தேகநபர்கள் வசம் இருந்த 1200 Pregabalin மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன. கைது […]

ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கான கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம் 5,000 ரூபாயாக இருந்த ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக உதவித்தொகை 7,500 ரூபாவாகவும், 2,000 ரூபாயாக இருந்த முதியோர் உதவித்தொகை 3,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (07) பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. பாராளுமன்றத்தின் புதிய அமர்வின் ஆரம்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது விஞ்ஞாபனத்தை சமர்ப்பித்த பின்னர் சுமார் ஒரு மணிநேரம் இருவரும் கலந்துரையாடியுள்ளனர். இந்த நிகழ்வில் வேறு எவரும் கலந்து கொள்ளவில்லை, மேலும் என்ன பேசப்பட்டது என்பது வெளியிடப்படவில்லை.

சர்வதேச இணைய வழங்குநர்கள் மற்றும் பல்வேறு அக்கறையுள்ள தரப்பினரால் கவலைகள் எழுப்பப்பட்ட போதிலும், இலங்கை நாடாளுமன்றம் ஜனவரி 24 அன்று ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. இந்தச் சட்டத்தின் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணிப்பதாக ஐக்கிய இராச்சியம் கூறியுள்ளது. இங்கிலாந்திற்கான இந்தோ-பசுபிக் மாநில அமைச்சரானAnne-Marie Trevelyan அந்நாட்டு பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார். “ஒக்டோபரில் நான் இலங்கை ஜனாதிபதி விக்கிரமசிங்கவைச் சந்தித்தபோதும், தெற்காசிய இராஜாங்க அமைச்சர் லார்ட் (தாரிக்) அஹ்மட் இலங்கையைச் சந்தித்தபோதும் உட்பட, கருத்துச் சுதந்திரம் மற்றும் பொருளாதார […]