சர்வதேச இணைய வழங்குநர்கள் மற்றும் பல்வேறு அக்கறையுள்ள தரப்பினரால் கவலைகள் எழுப்பப்பட்ட போதிலும், இலங்கை நாடாளுமன்றம் ஜனவரி 24 அன்று ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது.
இந்தச் சட்டத்தின் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணிப்பதாக ஐக்கிய இராச்சியம் கூறியுள்ளது.
இங்கிலாந்திற்கான இந்தோ-பசுபிக் மாநில அமைச்சரானAnne-Marie Trevelyan அந்நாட்டு பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
“ஒக்டோபரில் நான் இலங்கை ஜனாதிபதி விக்கிரமசிங்கவைச் சந்தித்தபோதும், தெற்காசிய இராஜாங்க அமைச்சர் லார்ட் (தாரிக்) அஹ்மட் இலங்கையைச் சந்தித்தபோதும் உட்பட, கருத்துச் சுதந்திரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்தச் சட்டத்தின் தாக்கம் குறித்து இங்கிலாந்து கவலைகளை எழுப்பியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்