27.9 C
Jaffna
September 16, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

‘பொருளாதாரத்தைச் சீர்செய்வதற்கும் இனவாதத்தை ஒழிப்பதற்கும் அதிமுன்னுரிமை’

இலங்கையின் உருக்குலைந்த பொருளாதாரத்தைச் சீர்செய்து நிலைப்படுத்துவதற்கும் இனவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்குமே தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அதிமுன்னுரிமை கொடுத்துச் செயற்படும் என்று செப்டெம்பர்  21 ஜனாதிபதி தேர்தலின் முன்னரங்க வேட்பாளர்களில் ஒருவரான அநுரா குமாரா திசாநாயக்க செவ்வாய்கிழமை (03)  கூறினார்.

முழுவீச்சிலான தேர்தல் பிரசாரங்களுக்கு மத்தியிலும் தேசிய மக்கள் சக்தியின் தலைமைக்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி. )   தலைமையகத்தில் ‘ த இந்து ‘ வுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய திசாநாயக்க பழைய அரசியல் ஒழுங்கில் இருந்து விலகி இலங்கை ‘ ஒரு மறுமலர்ச்சி திட்டத்துக்கு ‘ தயாராகிறது என்றும் மக்கள் மாற்றத்துக்காக வாக்களிக்கப்  போகிறார்கள் என்றும்  குறிப்பிட்டார். 

 சிறந்த ஒரு பேச்சாளரான திசாநாயக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியில் மக்கள் ஆதரவில் முன்னணியில் இருப்பதாக  பல கருத்துக் கணிப்புகள் கூறியிருக்கின்றன. கொழும்பு மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான ஜே.வி.பி.யின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் தே்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதான போட்டியாளர்களாக விளங்குகிறார்கள்.

2019 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட திசாநாயக்க மொத்த வாக்குகளில் வெறுமனே 3.16 சதவீதமான வாக்குகளை மாத்திரமே பெற்று மூன்றாவதாக வந்தார். அந்த தேர்தலிலேயே கோட்டாபய ராஜபக்ச மிகவும் தெளிவான பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவானார். திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவாகுவதற்கு அவரின் வாக்குப்பலம் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரிக்க வேண்டும். 

அந்த தேர்தலுக்கு பிறகு தனது கட்சி இடையறாது முன்னெடுத்த முயற்சிகளைப் பற்றி குறிப்பிட்ட திசாநாயக்க தேசிய மக்கள் சக்தியின் பிரசாரம் ‘ நீண்டகாலத்துக்கு முன்னரே ‘ தொடங்கிவிட்டது கூறினார்.

இந்த ஐந்து வருடங்களிலும் அவரது வாய்ப்புக்கள் வியப்பூட்டுகின்ற அளவுக்கு அதிகரித்தமைக்கு சமூகத்தின் அடிமட்டத்தில்  முன்னெடுக்கப்பட்ட துடிப்புமிகு பிரசாரங்கள் மாத்திரம் காரணமில்லை. 2022 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட படுமோசமான பொருளாதார நெருக்கடியை அடுத்து மூண்ட பிரமாண்டமான மக்கள் கிளர்ச்சி ஜனாதிபதி கோட்டாபயவை அதிகாரத்தில் இருந்து விரட்டியது. மக்கள் போராட்ட இயக்கம் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரியதற்கு புறம்பாக ‘ முறைமை மாற்றத்தையும் ‘ வேண்டிநின்றது. அந்த உணர்வும் திசாநாயக்கவை முன்னரங்கத்துக்கு கொண்டுவந்தது. தாங்கள் வேண்டிநின்ற மாற்றத்தை உருவகப்படுத்தி நிற்பவராக  பலர் குறிப்பாக, இளைஞர்கள் நோக்கினார்கள்.

அதனால் தோன்றியிருக்கின்ற சவாலைச் சுட்டிக்காட்டிய திசாநாயக்க ” மக்கள் இப்போது உரர்ந்த எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறார்கள். நாம் எவ்வாறெனினும், இந்த ஆர்வக் கிளர்ச்சியையும் சக்தியையும் நம்பிக்கையையும் நேர்மறையான மாற்றத்துக்காக ஆக்கபூர்வமான வழியில்  செல்லவைக்கவேண்டும்” என்று கூறினார்.

ஜனாதிபதியாக தெரிவானால் முதல் ஐந்து வருடங்களில் தனது மூன்று முனையிலான இலக்குகளை விளக்கிய அவர் ” பொருளாதாரத்தைச் சீர்செய்து நிலைப்படுத்தி அது சகலருக்கும் பயன்தருவதை உறுதிப்படுத்த வேண்டும்  இனவாதமற்றதும்  மதச்சகிப்புத்தன்மை கொண்டதுமான  நாடொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும்  சமூகநீதிக்கான பாதையொன்றை வகுக்கவேண்டும். அதையே நான் வெற்றி என்று கருதுவேன்” என்றார்.

ஊழலை ஒழிப்பதாக  சூளுரைத்திருப்பதற்கு புறம்பாக தேசிய மக்கள் சக்தி பிரேமதாசவின் பிரதான எதிர்க்கட்சி கூட்டணி கூறியிருப்பதைப் போன்று சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் தற்போதைய செயற்திட்டத்தை மீள் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்போவதாகவும் கூறியிருக்கிறது. உயர்ந்த வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில்  விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேதனைமிகு சிக்கன நடவடிக்கைகளுடன் வாக்காளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இரு கட்சிகளும் நன்கு தெரியும். எவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும், இருளார்ந்த பொருளாதார வாய்ப்புக்களையே கையேற்கவேண்டிருக்கும். 

தேசிய மக்கள் சக்தியை விமர்சிப்பவர்கள் இரு பூச்சாண்டிகளைக் காட்டுகிறார்கள். ஒன்று 1970 களிலும்  1980 களிலும் ஜே.வி.பி. முன்னெடுத்த ஆயுதக்கிளர்ச்சி. மற்றையது கட்சியின் அரச சோசலிச கொள்கை மூலத்தை அடிப்படையாகக் கொண்டு அதன் பொருளாதார முகாமைத்துவம் பற்றியது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொருளாதாரத்தில் தனியார்துறையின் பாத்திரத்தை மாற்றியமைத்து விடக்கூடும் என்றும் தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தில் முன்னெடுக்கப்படும் சந்தைக் கடடுப்பாட்டு தளர்வு மற்றும் வர்த்தக தாராளமயமாக்கலை தீவிரமாக நடைமுறைப்ப டுத்துவதற்கு பதிலாக பட்ஜெட் பற்றாக்குறையை விஸ்தரிக்கக்கூடியதாக  நலன்புரித்திட்டங்களுக்கு செலவினஙகளை அதிகரிக்கும்  என்றும்  விமர்சகர்கள் அஞ்சுகிறார்கள்.

திசாநாயக்கவின் தேர்தல் கூட்டணியின் மையக்கட்சியான ஜே.வி.பி.யின் தாபக கோட்பாடு மாரக்சியம் – லெனினிசமாக இருக்கி்ன்ற அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் முதலாளித்துவ எதிர்ப்பு கொள்கைக்கான தீவிரவாதப் போக்குடைய எந்த தொனியும் இல்லை.  ‘ சகல பிரதான தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் ‘  நலன்புரித் திட்டங்கள் தொடர்பில் காணப்படும் பல  வாக்குறுதிகள் ஏறத்தாழ ஒரே மாதிரியானவையாக இருப்பதாக திசாநாயக்கவே சுட்டிக்காட்டினார்.

” உண்மையில், மற்றையவர்களின் நலன்புரித் திட்டங்களுடன் ஒப்பிடும்போது எமது நலன்புரித் திட்டத்தினால் அரசுக்கு மிகவும் குறைந்த செலவே ஏற்படும்” என்று அவர் கூறினார். பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கு தங்களிடம் இருக்கும் திட்டங்கள் குறித்து கூறிய திசாநாயக்க ‘ எந்த  புதிய வரிகளையும் விதிக்காமல் ‘ வருவாயை அதிகரிப்பதற்கு செயற்திறன்மிகுந்த வரி சேகரிப்பு முறைமை கடைப்பிடிக்கப்படும் என்று குறிப்பிட்டார். தற்போதைய்அயச வருவாயை பெருக்கும் என்று தேசிய மக்கள் சக்தி எதிர்பார்க்கும் உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சி குறித்து அதன் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருக்கிறது.

” ஜனநாயக அரசியலில் எமது கட்சிக்கு இருக்கும் ஈடுபாட்டை 35   வருடங்களாக நாம் வெளிக்காட்டி வந்திருக்கிறோம். சகலருமே  மிகவும் தெளிவாகப் பார்க்கக்கூடியதாக எமது பொருளாதார நோக்கை நாம் விளக்கிக் கூறியிருக்கிறோம். எமது எதிரிகளினால் கிளப்பப்படுகின்ற இந்த அச்சங்கள் எல்லாம் கடந்த காலத்தைப் பற்றியவை. எதிர்காலத்தில் அது வாக்காளர்கள் மத்தியில் எடுபடப்போவதில்லை ” என்று திசாநாயக்க கூறினார்.

இந்தியாவுடன் கூட்டுப்பங்காண்மை 

வெளிநாட்டு முதலீடுகள் பற்றி பேசிய அவர் இந்தியாவுடன் நாம் பணியாற்றவேண்டியது அவசியமாகும். குறிப்பாக சக்தித் துறையில் அது மிகவும் முக்கியமானதாகும் என்று குறிப்பிட்டார். சக்தித்துறையில் உட்கட்டமைப்புகளை நிர்மாணிப்பதில் இந்திய ஒத்துழைப்பின் ஆற்றில் குறித்து சுட்டிக்காட்டிய அவர் புதுப்பிக்க சக்தியை குறிப்பாக காற்றாலை மூலமான சக்தியை உற்பத்தி செய்வதில் பேரளவான உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டிருக்கிறது என்று சொன்னார்.

அதானி கிறீன் நிறுவனம் வடமாகாணத்தில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் ஒன்றில் 442 மில்லியன் அமெரிக்க டொலர்களைை முதலீடு செய்கின்றது. மின்சாரத்துக்கு விலையை தீர்மானிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாகவும் மன்னார் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக கிளப்பப்படும் அக்கறைகள் மற்றும் வெளிப்படையான கேள்விப்பத்திர முறை கடைப்பிடிக்கப்படவில்லை என்ற முறைப்பாடுகள் காரணமாகவும் அந்த திட்டம் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

தனியொரு நபர் மீது ஆபத்தான அளவுக்கு அதிகாரங்களைக் குவிப்பதாக உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் அமைப்புக்கள் நீண்டகாலமாக குற்றஞ்சாட்டிவரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக திசாநாயக்க உறுதி அளித்திருக்கின்றார். ” சாத்தியமானளவு விரைவாக அதைச் செய்வதற்கு நான் உறுதிபூண்டிருக்கிறேன். ஆனால் தாமதங்கள் ஏற்படலாம். ஜனாதிபதி ஆட்சிமுறை நாட்டின் தேர்தல் முறையுடனுடனும் சட்டங்களுடனும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆட்சிமுறையை ஒழிப்பது என்பது அந்த சட்டங்களில் சிலவற்றை மாற்றுவதுடன்  இணைந்ததாக இருக்கிறது. அதை ஆதரித்தது.

” எங்களில் சிலரும் அந்த செயன்முறைகளில் பங்கேற்றிருந்தோம்.  மீண்டும் முதலில் இருந்து புதிதாகத்  தொடங்க வேண்டியதில்லை. அந்த முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை முன்னெடுப்போம் ” என்று திசாநாயக்க கூறினார்.

Related posts

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

User1

அராலியில் பிறிமியர் லீக் சுற்றுப்போட்டி

User1

குச்சவெளி பள்ளவக்குளம் விவசாயக் காணிப் பிரச்சினை சம்மந்தமாக அரசாங்க அதிபருடனான சந்திப்பு..!

User1

Leave a Comment