பெய்து வரும் கன மழை காரணமாக இன்று (24) கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் நிரம்பி வழிந்து ஓடாத நிலையில் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.குறிப்பாக தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளதுடன் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச் முகம்மது கனி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து நீரை வடிந்தோடச் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.