• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

புதிய அரசாங்கத்துடனான அரசியல்தீர்வு குறித்து பிரித்தானியாவின் எதிர்பார்ப்பு

admin by admin
September 3, 2024
in இலங்கை செய்திகள்., வவுனியா செய்திகள்
0
புதிய அரசாங்கத்துடனான அரசியல்தீர்வு குறித்து பிரித்தானியாவின் எதிர்பார்ப்பு
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வருகின்ற புதிய அரசாங்கத்துடன் அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு தொடர்பாக இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம் என்று இலங்கைக்கான பிரித்தானிய (United Kingdom) உயர்ஸ்தானிகர் அன்றூ பட்ரிக் (Andrew Patrick) தெரிவித்துள்ளார். 

இலாப நோக்கற்ற நிறுவனம் ஒன்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் பங்கேற்ற போதே அவர் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், 

“பிரித்தானியா பல வருடங்களாக அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல்தீர்வு தொடர்பாக வலியுறுத்தி வருகிறது. பிரதான வேட்பாளர்கள் இந்த விடயம் தொடர்பில் தமது கொள்கைகளை வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவுக்கு தெற்காசிய பிராந்தியம் முக்கியத்துவமிக்கது. எதிர்காலம் இங்கு முக்கியத்துவமிக்கதாக உள்ளது. இலங்கையின் இரண்டாவது ஏற்றுமதி வர்த்தக பங்காளராக தொடர்ந்தும் இருந்து வருகிறது.

சுற்றுலாத்துறையிலும் இலங்கையில் இரண்டாவது இடத்தை பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் பெற்றுள்ளனர். 

அதேவேளை குறிப்பாக அவர், “இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவு முக்கியத்துவமிக்கது. பிரித்தானியா தொடர்ந்தும் இலங்கையிலிருந்து அதிக இறக்குமதிகளை செய்கிறது. இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் பிரித்தானியா இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது.

சுற்றுலாத்துறை இலங்கையில் மிக முக்கியமான ஆற்றலை கொண்டிருக்கிறது. அதிலும் பிரித்தானியா இலங்கைக்கு சிறந்த பங்களிப்பை வழங்குகிறது. சட்டவிரோத குடியேற்ற வாசிகளை ருவாண்டாவுக்கு அனுப்புகின்ற திட்டம் புதிய பிரித்தானிய அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டுக்கும் இது தொடர்பான பிரச்சினை சவாலாகவே இருக்கும்.

அதிகமான மக்கள் 20ஆயிரம் டொலர்களுக்கும் அதிக பணத்தை கடத்தல்காரர்களுக்கு கொடுத்து பிரித்தானியாவுக்கு வர முயற்சிக்கின்றனர். இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை பேரவையின் புதிய அமர்வு நடைபெறவுள்ளது.

இதில் இணை அனுசரணை நாடுகள் குழு எவ்வாறான முடிவை எடுத்துள்ளது என்று தற்போது கூற முடியாது. ஆனால், இப்போது இலங்கையில் தேர்தல் காலம் என்பதால் தேர்தலின் பின்னர் இந்த விடயத்தில் செயற்படுவதற்கு புதிய கதவுகள் திறக்கப்படும் என்று நம்புகின்றோம்” என தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை கொண்டு வரப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த உயர்ஸ்தானிகர், அதற்கு அமர்வு தொடங்கும் வரை காத்திருக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க அரசியல் தீர்வு தொடர்பில் வடக்கு – கிழக்கு மக்கள் மற்றும் தலைவர்கள் எவ்வாறான விடயங்களை உங்களிடம் தெரிவித்தார்கள் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த உயர்ஸ்தானிகர், “இந்த விடயம் தொடர்பில் நான் மிகக் கவனமாக பேச வேண்டியிருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வருகின்ற புதிய அரசாங்கத்துடன் அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு தொடர்பாக இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம்.

பிரித்தானியா பல வருடங்களாக அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல்தீர்வு தொடர்பாக வலியுறுத்தி வருகிறது. பிரதான வேட்பாளர்கள் இந்த விடயம் தொடர்பில் தமது கொள்கைகளை வெளியிட்டுள்ளனர்” என்று வலியுறுத்தியுள்ளார். 

Related Posts

தெல்தெனிய கொ*லை சம்பவம்; நால்வருக்கு விளக்கமறியல்.!

தெல்தெனிய கொ*லை சம்பவம்; நால்வருக்கு விளக்கமறியல்.!

by Mathavi
June 26, 2026
0

நுவரெலியாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த பெண் வைத்தியர் தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காணப்பட்ட காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அவரது...

பனைநின்றான் கிராமத்திற்கான வீதி, பாலத்தின் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி.!

பனைநின்றான் கிராமத்திற்கான வீதி, பாலத்தின் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி.!

by Mathavi
June 26, 2026
0

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பனைநின்றான் கிராமத்திற்குச் செல்லும் பாலமும் அதனோடிணைந்த ஒருபகுதி வீதி என்பவற்றின் சீரமைப்புப் பணிகள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

போதைக்கு எதிராக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டம்.!

போதைக்கு எதிராக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டம்.!

by Mathavi
June 26, 2026
0

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி 'போதைக்கு எதிராக ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில் பிரஜா சக்தியின் ஏற்பாட்டில் மன்னார் மூர் வீதி கிராமத்தில் இன்று...

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

by Mathavi
June 26, 2026
0

பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு...

வலி. வடக்கில் காணி விடுவிப்புக் கோரி தொடரும் போராட்டம்.!

வலி. வடக்கில் காணி விடுவிப்புக் கோரி தொடரும் போராட்டம்.!

by Mathavi
June 26, 2026
0

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக பத்தாவது நாளாக...

சரித் அபேசிங்கவை கட்சியிலிருந்து நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி.!

சரித் அபேசிங்கவை கட்சியிலிருந்து நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி.!

by Mathavi
June 26, 2026
0

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு ஒன்றின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஹொரனை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் விபரம் மற்றும் அவர் வகித்த...

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
June 26, 2026
0

ஹங்வெல்ல, எம்புல்கம - பனாகொட வீதியில் எம்புல்கம தேவாலயத்திற்கு அருகில் நேற்று வியாழக்கிழமை (25) அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து...

வெவ்வேறு இடங்களில் கோடாவுடனும் மதுபானத்துடனும் மூவர் சிக்கினர்.!

கோடாவுடன் இருவர் கைது.!

by Mathavi
June 26, 2026
0

கஹவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலகமவத்த பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு வைக்கபட்டிருந்த கோடாவுடன் நேற்று வியாழக்கிழமை (25) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கஹவத்தை பகுதியயை சேர்ந்த...

குளத்தில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு.!

குளத்தில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
June 26, 2026
0

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவின் கல்விளாற்குளத்திற்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை (25) பிற்பகல் 3.00 மணியளவில் தூண்டிலில் மீன்பிடிக்கச்...

புதிய செயற்கை கால் தயாரிப்பு திட்டத்தின் ஆரம்ப விழா.!

புதிய செயற்கை கால் தயாரிப்பு திட்டத்தின் ஆரம்ப விழா.!

by Mathavi
June 26, 2026
0

அவயவங்களை இழந்த எமது மக்கள் முடங்கி போகாமல், அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களின் வழமையான செயல்பாடுகளுக்கு உதவும் ஜெய்ப்பூர் நிறுவனம் தனது சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்குவது எமது...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி