யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற புகையிரத விபத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது
குறித்த புகையிரத விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரதக் கடவை இல்லை என தெரிவித்தும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் தமது கடமையை செய்யவில்லை என குறிப்பிட்டும் ஆர்ப்பாட்டம் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது
இதன் போது அவ்விடத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் ரயில் வருகின்ற பொழுது அதனை மறித்தும் பதாதைகளைத் தாங்கியவாறு கோஷம் எழுப்பி தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது இறந்த உயிரே இறுதியாகட்டும், எங்கள் உயகரைக்காவு கொள்ளாதே!, தினம் தினம் பயந்த பயணமா? ஆகிய கோஷங்கள் தாங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
குறித்த பகுதியில் சுண்ணாகம் பொலிசார் மற்றும் பொதுமக்கள், கிராம மட்டத்தை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
6:45 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற புகையிரதத்தை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பலத்த கோஷம் அனுப்பி பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விபத்து ஏற்படாதவாறு வலி இதற்கு பிரதேச சபை வேகத் தடுப்புகளையும் இன்றைய தினம் அமைத்தது