28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்

பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கவனிப்பாரற்று ஆபத்தான முறையில் காணப்படும் மருதங்கேணி-பருத்தித்துறை வீதி

வடமராட்சி மருதங்கேணி தொடக்கம் பருத்தித்துறை வரையிலான பிரதான வீதி பலவருடங்களாக மோசமடைந்து காணப்படுவதாக மக்கள் கவலையும் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.

மருதங்கேணி தொடக்கம் பருத்தித்துறை வரையான மக்கள் பாவிக்கும் பிரதான வீதியாக மருதங்கேணி வீதியே காணப்படுவதனால் இவ்வாறான மோசமான வீதியால் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு பல இன்னல்களையும் சவால்களையும் எதிர்நோக்குவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை வைத்தியர் நி.நரேந்திரன் தெரிவித்ததாவது ,

மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையையும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையையும் இணைக்கும் பிரதான வழித்தடமாக காணப்படும் இப்பாதை மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளதால் அவசர நோயாளிகளை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கு நோயாளிக்கான உயிர்காப்பு நேரம் தாமதமடைவதோடு, பல இடர்களையும் எதிர்நோக்கவேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் இந்த வீதியினால் வீதிவிபத்துக்களையும் மக்கள் எதிர்கொள்கின்றார்கள் எனத்தெரிவித்தார்.

மேலும் அன்றாட தேவைக்காக இவ்வீதியை பயன்படுத்துவோர் மழைகாலங்களில் பல்வேறுபட்ட ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர்.

எனவே இவ்வீதியின் அவசியம் கருதி உடனடியாக இவ்வீதியை புணரமைத்துத்தருமாறு சம்மந்தப்பட்ட அரச திணைக்களங்களிடம்,சம்மந்தப்பட்ட பிரதேச அரசியல்வாதிகளிடமும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டால் அவசர வெளியேற்றத்துக்குரிய மார்க்கமாகவும் கூட இந்த பிரதான வீதியே காணப்படுவதனால் உரிய முறையில் இவ்வீதியினை திருத்தியமைப்பது அத்தியாவசிய தேவையாகவுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

kmc 20240131 123759 IMG 20240131 083731 kmc 20240131 123135

Related posts

யாழில் பயங்கரம்-வைத்தியாசலைக்குள் புகுந்து காவலாளி மீது தாக்குதல்..!{படங்கள்}

sumi

ஒன்லைன் ஊடாக பல தரப்பட்ட மோசடிகள் தொடர்பில் மஸ்கெலிய பொலிஸ் எச்சரிக்கை

User1

வெள்ளவத்தையில் உயிரிழந்த பெண் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

sumi

Leave a Comment