28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ் பல்கலை மாணவி உயிரிழப்பு – மருத்துவ அறிக்கையில் காரணம் வெளியானது !!

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவி நேற்றைய தினம்(23) உயிரிழந்தார்.

காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவி, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த மாணவி நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழப்பு தொடர்பான உடற்கூற்று பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த மாணவியின் உடற்கூறு பகுதி மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் உயிரிழந்த மாணவியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

மட்டக்களப்பு கிரான் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் பலி

User1

மன்னார் நானாட்டானில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து- இளம் தாய் காயம்.

sumi

மாமியாரை அடித்து கொன்ற மருமகன் – ஆபத்தான நிலையில் மனைவி மற்றும் மகள்

User1

Leave a Comment