உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு அழைப்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
54 பார்வைகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை இரவு ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய அரசின் நிர்வாகச் சீர்கேடுகளை விமர்சித்ததுடன், 2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசை உருவாக்க ஒன்றிணையுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,

“கிராமப்புறங்களில் மக்கள் பெரும் ஆதரவைத் தந்து வருகின்றனர். வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என அனைவருமே எமது மக்கள் தான். தற்போதைய அரசு பெரும் வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்தாலும், எதனையும் நிறைவேற்றவில்லை.

வேலைவாய்ப்பின்மை, வரியதிகரிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அல்லல்படுகின்றனர். வெறுப்பு அரசியலை விடுத்து, அபிவிருத்தி மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தலைமுறை அரசியலை உருவாக்க நாங்கள் தயாராகவுள்ளோம்.” – என்றார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன கருத்துத் தெரிவிக்கையில்,

“அரசு ஆட்சிக்கு வந்து மூன்றில் ஒரு பங்கு காலம் கடந்தும், கோட்டே தொகுதியில் எந்தவொரு உருப்படியான அபிவிருத்தியும் நடக்கவில்லை. சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளின் மரணத்துக்கு  இந்த அரசே பொறுப்பேற்க வேண்டும். பொறுப்பான அமைச்சர் தனது கடமையை முறையாகச் செய்யவில்லை. 2029 இல் நாட்டின் எதிர்காலத்தை நாமல் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்க நாம் இன்று முதலே தயாராக வேண்டும்.” – என்றார்.

இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தனது உரையில்,

“மஹிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றப்பட்ட கோட்டே, இன்று முறையற்ற நிர்வாகத்தாலும், டெங்கு அபாயத்தாலும் சீரழிந்து போயுள்ளது.

மக்கள் வரி செலுத்துவது சுகாதாரமான சூழலைப் பெறுவதற்காகவே தவிர, அபராதம் கட்டுவதற்காக அல்ல. அரசாங்கமும் உள்ளூராட்சி மன்றங்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்” என்று கவலை வெளியிட்டார்.

இறுதியாக உரையாற்றிய யூ.கே. சுமித் உடுகும்பர,

“நாட்டின் ஒவ்வொரு துறை சார்ந்து நாடாளுமன்றத்தில் தெளிவான புரிதலுடன் பேசும் நாமல் ராஜபக்ஷவே நாட்டின் எதிர்காலத் தலைவர் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

2029 இல் அவர் ஜனாதிபதியாவது உறுதி. கோட்டே தொகுதியில் மிலிந்த ராஜபக்ஷவின் வலுவான தலைமைத்துவத்துடன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நாம் ஒன்றிணைந்துள்ளோம்” என்று நம்பிக்கை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் சானக சம்பத் மதுகொட உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0