உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள சுவிஸ் தூதருடன் ரெலோ சந்திப்பு

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
22 பார்வைகள்

தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள சுவிற்சலாந்தின் இலங்கைக்கான தூதுவர் மேன்மை தங்கிய சிரி வால்ட் அம்மையாரை சுவிற்சலாந்து தூதரகத்தில் இன்று 07-07-2026 தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பிரதிநிதிகள் மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.

இச் சந்திப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதி தலைவரும் பேச்சாளரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வடமாகாண தேசிய அமைப்பாளருமான குருசுவாமி சுரேந்திரன் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான  செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தூதுவரின் பதவி காலத்தில் தமிழ் தேசிய கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான தொடர் முயற்சிகளை மேற்கொண்டமைக்கு நன்றி கூறப்பட்டது.

தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளை சுவிற்சலாந்துக்கு அழைத்தும், தூதரகத்திற்கு அழைத்தும், பாராளுமன்றத்திலும் மற்றும் அவர் மேற்கொண்ட வடக்கு கிழக்கு விஜயங்களின் பொழுதிலும் ஒற்றுமைப்படுத்துவதற்கான காத்திரமான முயற்சிகளை அம்மையார் மேற்கொண்டு இருந்தார்.

இருப்பினும் துரதிஷ்டவசமாக அந்த ஒற்றுமை முயற்சி நிறைவேறாவிட்டாலும் கூட எதிர்காலங்களிலும் சுசிலாந்தின் தூதரகம் அந்த முயற்சியை தொடர வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்ததோடு அதற்கு தாம் பரிபூரண ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் கட்சிப் பிரதிநிதிகள் தரப்பால் எடுத்துக் கூறப்பட்டது.

மேலும் தமிழ் மக்களின் இன நலன் சார்ந்த விடயங்களில் சுவிஸ் தூதரகமும்  கடந்த கால தூதுவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை தமிழ் மக்கள் சார்பில் தாங்கள் வரவேற்பதாகவும் தொடர்ந்தும் இந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அம்மையாருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் இச் சந்திப்பு நிறைவு பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

2 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

45 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

39 0 0