உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

டயகம பாதையில் அரசுப் பேருந்து சேவை தடை – பொதுமக்கள் அவதி!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
28 பார்வைகள்



ஹட்டன் அரச பேருந்து நிலையத்திலிருந்து போடைஸ் வழியாக டயகம பிரதேசத்திற்குக் காலை 7.00 மணிக்கு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அரசு பேருந்து நேற்றைய தினம் சேவையில் ஈடுபடாத காரணத்தால், நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

குறிப்பாக டயகம, அக்கரப்பத்தனை, மன்றாசி, ஹோல்புறூக், அல்பியன், டொரிங்டன், பிரஸ்டன், ஆட்லோ, பிரேமோர் உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களும் தங்களது பணியிடங்களுக்குச் செல்ல பல மணி நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஹட்டன் அரச பேருந்து நிலையத்தால் பேருந்து சேவையில் ஈடுபட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அதற்குப் பதிலாக மாற்றுப் பேருந்தொன்றை உடனடியாக சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடைமுறைகளை போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ச்சியாக ஏற்படும் போக்குவரத்து குறைபாடுகள் காரணமாக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள், ஆசிரியர்களின் கடமைகள் மற்றும் பொதுமக்களின் அன்றாட தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதோடு பொருளாதார இழப்புகளும் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.

மாதாந்த பருவகால சீட்டுகளை முன் கூட்டியே பணம் செலுத்தி பெற்று அரச பேருந்து சேவைகள் இல்லாத காரணத்தால் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனியார் பேருந்துகளில் அதிக அளவில் பணம் செலுத்தி கால நேரத்திற்கு செல்ல முடியாது உள்ளது.

ஹட்டன் போடைஸ் – டயகம பாதையில் தினசரி முறையான மற்றும் தடையற்ற போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச நிலைய அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்தி, எதிர்காலத்தில் இத்தகைய அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

51 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

61 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

54 0 0