உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மீகொடை தன்சல் விபத்து – சந்தேக நபர்கள் நால்வருக்கும் மீண்டும் விளக்கமறியல்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
28 பார்வைகள்

கடந்த வெசாக் தினத்தன்று மீகொடை பகுதியில் நடைபெற்ற தன்சல் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது கெப் ரக வாகனத்தைச் செலுத்தி, 6 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான விபத்துச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த நான்கு சந்தேகநபர்களும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (16) ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் ரஜிந்ரா ஜயசூரிய இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்த நீதிமன்ற விசாரணையின் போது, விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரது குடும்பத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த ஏனைய ஐந்து நபர்களின் குடும்பங்களுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் நட்டஈடு வழங்க பிரதிவாதிகள் தரப்பு உடன்பாடு தெரிவித்துள்ளது.

உன் கை ட்இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கையை அடுத்த வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

65 0 0
இலங்கை செய்திகள்

சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; ஒருவர் கொ*லை.!

தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகொட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (28) சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் 35 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொலை…

55 0 0
இலங்கை செய்திகள்

கனிம வள அகழ்வுக்கு புதிய நடைமுறை.!

மன்னார் மாவட்டத்தில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் உள்ளிட்ட கனிம வளங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையில் நடைமுறைகள் குறித்து விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட…

46 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

65 0 0