• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 17, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

selvan by selvan
June 16, 2026
in இலங்கை செய்திகள்.
0
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!
Share on FacebookShare on Twitter

இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட நவீன இராணுவ உபகரணங்கள் மற்றும் அவசர விபத்துச் சிகிச்சைக்கான மருத்துவத் தொகுதி என்பன உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டையிலுள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் இன்று ( 16) நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்த உபகரணங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தாவிடம் (ஓய்வு) உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும் கலந்துகொண்டார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இந்த இராணுவத் தளபாடங்களின் ஒட்டுமொத்த மதிப்பு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைட்டி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் கடமையாற்றும் இலங்கை இராணுவப் பிரிவினருக்காக, இந்தியப் படைகளால் வழங்கப்பட்ட விசேட உபகரணங்களும் இதனுள் அடங்கும்.

இவ்வுபகரணங்கள் அனைத்தும் கடந்த ஜூன் 10 முதல் 13 ஆம் திகதி வரை கொழும்புத் துறைமுகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “INS Sharda” போர்க்கப்பல் மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, “இந்திய இராணுவத்தின் தற்போதைய கையிருப்பில் இருந்தே இவ்வுபகரணங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இது இரு நாட்டுப் படைகளுக்கும் இடையிலான உடைக்க முடியாத பலமான பந்தத்திற்குச் சான்றாகும்” எனக் குறிப்பிட்டார்.


மேலும், இருதரப்புப் பாதுகாப்பு உறவானது வெறும் கூட்டுப் பயிற்சிகள் மற்றும் மனிதாபிமான உதவிகளுடன் நின்றுவிடாமல், தற்போது உட்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் இராணுவத் தளபாடங்களை வழங்குதல் எனப் பரந்த அளவில் விரிவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வில், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் ஆனந்த் முகுந்தன், லெப்டினன்ட் கேர்ணல் மந்தீப் சிங் மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு, இராணுவ உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts

மீகொடை தன்சல் விபத்து – சந்தேக நபர்கள் நால்வருக்கும் மீண்டும் விளக்கமறியல்!

by selvan
June 16, 2026
0

கடந்த வெசாக் தினத்தன்று மீகொடை பகுதியில் நடைபெற்ற தன்சல் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது கெப் ரக வாகனத்தைச் செலுத்தி, 6 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான விபத்துச்...

கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய மனுத் தாக்கல்!

கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய மனுத் தாக்கல்!

by selvan
June 16, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி...

மாலைதீவு பிரதிநிதிகள் கல்முனைக்கு விஜயம்

மாலைதீவு பிரதிநிதிகள் கல்முனைக்கு விஜயம்

by selvan
June 16, 2026
0

YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில் மாலைதீவு “Neurodiversity Association – Male” அமைப்பின் துணைத் தலைவி Aminath Azeema அவர்கள் கல்முனைக்கு வருகை தந்துள்ளார். இஸ்லாமிய புத்தாண்டான முஹர்ரம்...

கடமை நேரத்தில் பிரதேச சபை ஊழியர்களைக் கொண்டு தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

கடமை நேரத்தில் பிரதேச சபை ஊழியர்களைக் கொண்டு தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

by selvan
June 16, 2026
0

மானிப்பாய் பிரதேச சபையின் நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் இருவரை அவர்களுக்கு மேலுள்ள உத்தியோகத்தர் ஒருவர் தனது வீட்டுக்கு வர்ணம் பூச அழைத்துச் சென்றதாக மானிப்பாய் பிரதேச...

முடிவுக்கு வந்துவிட்டது திசைகாட்டி அரசின் ஆயுள்!

முடிவுக்கு வந்துவிட்டது திசைகாட்டி அரசின் ஆயுள்!

by selvan
June 16, 2026
0

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலேக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் பழிவாங்கும் விசாரணைகள் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் குறித்துப்...

சங்கீத்ஷனின் அடிப்படை உரிமை மீறல் மனு ஒத்திவைப்பு!

சங்கீத்ஷனின் அடிப்படை உரிமை மீறல் மனு ஒத்திவைப்பு!

by selvan
June 16, 2026
0

சொல்லிசைப் பாடகர் க.சங்கீத்ஷன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போது அதை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று...

செம்மணியில் உடைந்த நிலையில் எலும்புக்கூடுகள்: ஆய்வுகளின் பின்னரே உண்மை வெளிவரும் என்கிறார்  சட்டத்தரணி நிரஞ்சன்

செம்மணியில் உடைந்த நிலையில் எலும்புக்கூடுகள்: ஆய்வுகளின் பின்னரே உண்மை வெளிவரும் என்கிறார்  சட்டத்தரணி நிரஞ்சன்

by selvan
June 16, 2026
0

"புதைக்கப்பட்ட இடங்களில் இருந்து மீண்டும் தோண்டி எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டிருக்கின்றமை சாதாரணமாகவே கண்களுக்கு தெரிகின்றன. ஆனால் இது தொடர்பான விசாரணைகள் மூலமே உண்மையான முடிவுகளை கூற முடியும்." -...

மருத்துவர்கள் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு வழங்குமாறு கோரி ரவிகரன் எம்.பி. கடிதம்

மருத்துவர்கள் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு வழங்குமாறு கோரி ரவிகரன் எம்.பி. கடிதம்

by selvan
June 16, 2026
0

சுதேச மருத்துவ சேவையில் பதிலீடு இன்றி வழங்கப்பட்ட இடமாற்றங்களால் ஏற்பட்டுள்ள மருத்துவர்கள் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி, அவற்றுக்கு உடனடி தீர்வு வழங்குமாறு வடமாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்கள ஆணையாளர்...

தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!

தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!

by selvan
June 16, 2026
0

2026ம் ஆண்டு வரவு செலவுதிட்ட ஒதுக்கீட்டின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக செயல்படுத்தப்படும் 'தமக்கென ஓர் இடம் -அழகான வாழ்க்கை" தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ்...

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு.!

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு.!

by Mathavi
June 16, 2026
0

மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் 2026ஆம் ஆண்டு வரவு செலவுதிட்ட ஒதுக்கீட்டின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக செயல்படுத்தப்படும் 'தமக்கென ஓர் இடம் - அழகான வாழ்க்கை'...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி