உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடத் தொகுதி கையளிப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
23 பார்வைகள்

ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த திருமதி திலகா சேனா அவர்களின் பூரண நிதிப் பங்களிப்பில், அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் (IMHO) நடைமுறைப்படுத்தலின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய நான்கு வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடத் தொகுதி அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் (IMHO) திட்டப் பணிப்பாளர் திரு. கந்தையா விக்னேஸ்வரனால் நேற்று மாணவர்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு. பி. முத்துலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஹட்டன் கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சுமதி அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.

மேலும், ஹட்டன் கல்வி வலயத்தின் பிரதேசக் கல்விப் பணிப்பாளர்கள், அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் பெருந்தோட்டக் கல்விக்கான இணைப்பதிகாரி திரு. எம். பி. சந்திரசேகரன் அவர்கள், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நான்கு வகுப்பறைகளைக் கொண்ட இக்கட்டிடத் தொகுதி, நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்பப் பிரிவு, கணிதப் பிரிவு மற்றும் விஞ்ஞானப் பிரிவு உள்ளிட்ட கல்விப் பிரிவுகளின் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு மேம்பட்ட கல்விச் சூழல் மற்றும் தரமான கற்றல் வசதிகள் கிடைக்கப்பெறவுள்ளன.

இக்கட்டிடத் தொகுதியின் நிர்மாணத்திற்காக சுமார் ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

64 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

76 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0