உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தமிழர்கள் பாடுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாத நாடு இலங்கை – மன்னார் நகர சபையின் முதல்வர் தெரிவிப்பு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
25 பார்வைகள்

உண்மையிலேயே தமிழர்கள் பாடுவதற்கு கூட சுதந்திரம் இல்லாத ஒரு நாடாக எமது  நாடு மாறிக்கொண்டு வருகிறது என மன்னார் நகர சபையின் முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார்.

மன்னார் நகர சபையில் இன்று (05) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் நகரசபை தலைவர் என்ற ரீதியிலே, ஒரு தமிழன் என்ற ரீதியிலே, உண்மையிலேயே வன்மையான கண்டனங்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். 

இலங்கையிலே பாடுவதற்கு கூட தமிழர்களுக்கு உரிமை இல்லை என்று நினைக்கும் போது, இந்த அரசாங்கம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றன என்று பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. 

தமிழர்களுக்கான உரிமையைக் கொடுப்போம், சமூக உரிமையை வழங்குவோம் என்று சொல்லி வந்த இந்த அரசாங்கம், இன்று பாட்டு பாடியதற்கு எமது இளைஞர் ஒருவரை கைது செய்திருக்கிறார்கள்.

உடனடியாக இந்த அரசாங்கத்திடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன், எந்தவிதமான நிபந்தனையுமின்றி உடனடியாக அந்த இளம் பாடகரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

இதேவேளை மண்ணின் விலையை குறைப்பதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் பல வழிகளிலே முயற்சி எடுத்ததாகவும்

தானும் அந்த முயற்சியிலே இணைந்ததாகவும் குறிப்பிட்ட அவர்

அந்த முயற்சியின் பலனாக 51,500 ஆயிரம் ரூபாய்க்கு மண் வழங்கப்படும் என மக்களுக்கு தாங்கள் சொல்லியிருந்ததாகவும் தெரிவித்தார்.

எனினும் ஒரு சிலருக்கு மட்டும் அந்த மண் இப்பொழுது கிடைக்க பெற்றிருக்கின்றது என சுட்டிக்காட்டிய முதல்வர்ஏதோ ஒரு காரணங்களால், காரணங்களால் மீண்டும் குழப்பம் ஏற்படுத்தப்பட்டு மன்னார் மாவட்டத்தில் 70,000ஆயிரம்முதல்  , 80,000ஆயிரம்  வரை விற்க்கப்படுவதாகவும் கூறினார்.

எனவே, இந்த அதிக விலையில் மண்ணை பறிப்பவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0