உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தையிட்டி விகாரையை படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை பலாலி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

வெசாக் தினத்தை முன்னிட்டு தையிட்டி திஸ்ஸ விகாரையில் தற்போது விசேட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அதேநேரம், விகாரைக்குச் சற்றுத் தொலைவில் காணி உரிமையாளர்களினால் எதிர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறானதொரு சூழலில், வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் விகாரைக்குச் செல்வதாகக் கூறி, அங்கு சென்று சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியுள்ளதுடன், அப்பகுதியைப் புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.

இதனை அவதானித்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், அவர்கள் இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்தே, இரு இளைஞர்களையும் கைது செய்த பொலிஸார், அவர்களைப் பலாலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

42 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

24 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0