உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு  அவசர எச்சரிக்கை!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

நாடளாவிய ரீதியில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ள எச்சரிக்கைப் பலகைகளில் உள்ள அறிவுறுத்தல்களைத் துல்லியமாகப் பின்பற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ள அதிகாரசபை, வாகன ஓட்டுநர்கள் பின்வரும் பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

பகல் நேரமாக இருந்தாலும், மழை பெய்யும் போது தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு பயணிக்க வேண்டும்.

வாகனங்களின் வேகத்தை மணிக்கு 60 கிலோமீட்டர் என்ற வரம்பிற்குள் பேண வேண்டும்.

திடீரென பிரேக் போடுவதால் வாகனங்கள் வழுக்கிச் சென்று விபத்துக்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, முற்போகும் வாகனத்திற்கும் தங்களது வாகனத்திற்கும் இடையில் போதியளவு பாதுகாப்பான இடைவெளியைப் பேண வேண்டும்.

மழைக்காலங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளின் மேற்பரப்பு வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால், வாகன ஓட்டுநர்கள் அதிக அவதானத்துடனும் பொறுப்புடனும் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

63 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0