மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளிலும் நேற்று 21 ஆம் திகதி நள்ளிரவு முதல் கன மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேல் கொத்மலை, மவுஸ்சாகலை, காசல்ரீ, கென்யோன், புரோட்லேன்ட், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
கன மழை காரணமாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து காட்டாறுகள், நீர்வீழ்ச்சிகள், ஓடைகள் என்பனவற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
எனவே, அப் பகுதியில் உள்ள அனைத்து நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஆற்று பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கனமழை காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள், பண்ணையாளர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் மாணவர்கள் வருகை வீழ்ச்சி அடைந்ததுள்ளது.
கன மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஒரு சில பகுதிகளில் பாரிய மரங்கள் சாய்ந்துள்ளது.











