உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
37 பார்வைகள்

கொழும்பு, வெள்ளவத்தையில் போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 43 வயதுடைய சந்தேகநபர் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் போலி நாணயம் தொடர்பான பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, வெள்ளவத்தை பகுதியில் தற்காலிக தங்குமிடங்களை வழங்கும் இடமொன்றை சுற்றிவளைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 453 போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபருக்கு இந்த போலி டொலர் எவ்வாறு கிடைத்தன? மற்றும் இந்த நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதா? என்பது குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

68 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0