தோட்டப் பகுதிக்கு சேவை விஸ்தரிப்பு ; நுவரெலியா பிரதேச சபை!
நுவரெலியா பிரதேச சபையின் கீழ் இயங்கும் கிரிமிட்டிய தோட்டத்தின் வீதி ஓரம் பொது மக்கள் கொட்டிவந்த குப்பை கழிவுகளை இன்று 19 ம் திகதி அகற்ற பட்டது. இச் சேவை இன்று நுவரெலியா பிரதேச சபையின் சுகாதார பிரிவினால் சுத்தம் செய்ய பட்டது. இதனால் அப் பகுதியில் உள்ள பொது மக்கள் உட்பட பாடசாலை மாணவர்கள் சுகாதார சீர் கேடுகளில் இருந்து விடுதலை அடைந்தனர் .
அத்துடன் கிரிமெட்டிய தோட்ட பகுதிக்கு இனி வரும் காலங்களில் வாரத்தில் இரண்டு நாட்கள் கழிவுகளை எடுத்து செல்ல நுவரெலியா பிரதேச சபையின் வாகனம் பிரதேசத்துக்கு சமூகம் தரவும் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது.
மேலும்பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு எதிராக நுவரெலியா பொலீஸ் மற்றும் நுவரெலியா பிரதேச சுகாதார பிரிவினால் வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்க படுமென நுவரெலியா பிரதேச சபையின் சுகாதார அதிகாரி தெரிவித்தார்.