• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 20, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

அருச்சுனா மற்றும் அநுரவை கடுமையாக சாடிய யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்!

Bharathy by Bharathy
May 20, 2026
in இலங்கை செய்திகள்
0
அருச்சுனா மற்றும் அநுரவை கடுமையாக சாடிய யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்!
Share on FacebookShare on Twitter

தங்களை தமிழ் தேசியம் என்று மார்தட்டி, கண்டபடி பல்கலைக்கழக மாணவர்களை விமர்சித்துக்கொண்டு திரிகின்றவர்கள் தமிழ் தேசியம் சார் போராட்டங்களிலும், நினைவேந்தல்களிலும் கலந்து கொள்கின்றார்களா எமக்கு சந்தேகமாக உள்ளது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் கனகசூரியன் கவிதரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியத்தை உங்களது வாக்கு அரசியலுக்காக பயன்படுத்துகின்றீர்களா என்று எமக்கு சந்தேகமாக உள்ளது. நீங்கள் தமிழ் தேசிய உணர்வார் என்றால் தமிழ் மக்களது போராட்டங்கள், நினைவேந்தல்களில் பங்கெடுங்கள். ஆனால் உங்களை அங்கு எல்லாம் காண முடிவதில்லை.

2009ற்கு பின்னர் தமிழ் – சிங்கள மக்கள் ஒன்றாக இருப்பதாக கூறுகின்ற நீங்கள் எதற்காக பௌத்த விகாரைகளை தமிழர் தாயகங்களில் நிறுவுகிறீர்கள். தையிட்டி காணி, வெடுக்குநாறிமலை, குருந்தூர் மலை ஆகியன ஆக்கிரமிக்கப்படுகிறது. அத்துடன் திருகோணமலையில் புத்தர் சிலை விவகாரம் தொடர்கிறது. கிவுல் ஓயா திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றீர்கள், அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்துகின்றீர்கள்.

ஏன் இவ்வாறான ஆக்கிரமிப்புகளை செய்கின்றீர்கள்? இந்த அரசானது தேர்தல் பிரசாரத்தின்போது கூறியது தாங்கள் ஆட்சி பீடம் ஏறி 24 மணிநேரத்துக்குள் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வதாக. எங்கு விடுதலை செய்தீர்கள்? 10பேர் இப்போதும் துன்பத்துடன் சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.

இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டோரது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. நேற்றுகூட ஒரு காணாமல் ஆக்கப்பட்டோரின் தாயார் உயிரிழந்துள்ளார். சிங்கள மக்களுக்கு இவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் நீங்கள் பொறுமையாக இருப்பீர்களா?

உரிமைக்காக போராடுகின்ற மாணவர்களின் குரல் வளையை இந்த அரசு தொடர்ச்சியாக நசுக்குகிறது. கடந்த கால ஆட்சியாளர்களது செயற்பாட்டையே இந்த அரசும் செய்கிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.

தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்காத பட்சத்திலேயே எம்மால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. தமிழ் மக்களுக்கான பிரச்சினைக்கு தீர்வு கொடுத்தால் நாங்கள் இந்த நாட்டில் சந்தோஷமாக வாழ முடியும் என்று அரசுக்கு கூறுகிறோம். தீர்வு தராவிட்டால் நினைவேந்தல்கள் தொடரும், போராட்டங்கள் தொடரும், எதிர்கால தலைமுறைக்கு யுத்த வடுக்கள் தொடர்பான விடயங்கள் பல்கலைக்கழக சமூகத்தால் கடத்தப்படும் என்றார்.

Related Posts

87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

by Bharathy
May 20, 2026
0

நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவிலான மொபைல்கள் மற்றும் மின்கலன்களை வைத்திருந்ததை அடுத்து, கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூன்று சீனப் பிரஜைகள் சுங்க அதிகாரிகளால்...

போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

by Bharathy
May 20, 2026
0

பயணிகள் பேருந்துகளை இயக்கியபோது போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதை அடுத்து, எட்டு சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள், தேசிய போக்குவரத்து...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

by Bharathy
May 20, 2026
0

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. இதனால், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...

தோட்ட பகுதிக்கு தங்களது சேவையை விஸ்தரிப்பு செய்து உள்ளது நுவரெலியா பிரதேச சபை!

தோட்ட பகுதிக்கு தங்களது சேவையை விஸ்தரிப்பு செய்து உள்ளது நுவரெலியா பிரதேச சபை!

by Bharathy
May 20, 2026
0

நுவரெலியா பிரதேச சபையின் கீழ் இயங்கும் கிரிமிட்டிய தோட்டத்தின் வீதி ஓரம் பொது மக்கள் கொட்டிவந்த குப்பை கழிவுகளை இன்று 19 ம் திகதி அகற்ற பட்டது....

மாணவர்களின் உயர் கல்விக்கு கைகொடுக்கும் மஸ்கெலியா  – “நடராஜா அறக்கட்டளை” புலமைப் பரிசில்!

மாணவர்களின் உயர் கல்விக்கு கைகொடுக்கும் மஸ்கெலியா – “நடராஜா அறக்கட்டளை” புலமைப் பரிசில்!

by Bharathy
May 19, 2026
0

வசதி குறைந்த மாணவர்களின் உயர்கல்விக்கு கைகொடுத்து மாதாந்த புலமைப் பரிசில் திட்டத்தை கடந்த ஆறு ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் “நடராஜா அறக்கட்டளை” மலையகக் கல்வி வளர்ச்சிக்கு பாரிய...

வானவில் வர்ணம் போல் மஸ்கெலியா நகரை மேம்படுத்த ; பிரதே சபை முதல்வர் முன்வந்துள்ளார் .

வானவில் வர்ணம் போல் மஸ்கெலியா நகரை மேம்படுத்த ; பிரதே சபை முதல்வர் முன்வந்துள்ளார் .

by Bharathy
May 19, 2026
0

1968 ம் ஆண்டில் புதிய மஸ்கெலியா நகரம் உருவாக்கப்பட்டது. அக் காலகட்டத்தில் இந் நகரம் பிரதான வீதிகளை ஒதுக்கி மலை பாங்கான பகுதியில் கட்டப்பட்டது. இதன் காரணமாக...

அருச்சுனா அரசியலை வெளியில் வைக்க வேண்டும் ; விரிவுரையாளர் இளம்பிறையன் சீற்றம்!

அருச்சுனா அரசியலை வெளியில் வைக்க வேண்டும் ; விரிவுரையாளர் இளம்பிறையன் சீற்றம்!

by Bharathy
May 19, 2026
0

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தனது அரசியலை வெளியில் வைத்துக் கொள்ள வேண்டும். போட்டி அரசியலை பல்கலைக்கழகத்துக்குள் வைத்துக் கொள்ளக் கூடாது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சிரேஷ்ட...

இறந்தவர்களால் நீதி கோரிப் பேச முடியாது; அவர்களுக்காக நாமே குரலெழுப்ப வேண்டும்!

இறந்தவர்களால் நீதி கோரிப் பேச முடியாது; அவர்களுக்காக நாமே குரலெழுப்ப வேண்டும்!

by Bharathy
May 19, 2026
0

"இலங்கையில் இடம் பெற்ற மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படுவதை முன்னிறுத்தி நான் எனது குரலையும், அதிகாரத்தையும் பயன்படுத்துவேன். இறந்தவர்களால் நீதிக்காக குரலெழுப்ப...

சுடப்பட்டு பிடிபட்ட சந்தேக நபர் தொடர்பில் விசாரணை!!

சுடப்பட்டு பிடிபட்ட சந்தேக நபர் தொடர்பில் விசாரணை!!

by Bharathy
May 19, 2026
0

பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிய பின்னர் சுடப்பட்டு கைதான சந்தேக நபர் தொடர்பில் அம்பாறை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அம்பாறை பொது வைத்தியசாலையில் வைத்து...

போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு!

போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு!

by Bharathy
May 19, 2026
0

போதைப்பொருள்  ஒழிப்புத் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட  போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் குறித்து அம்பாறை மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி