உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

யாழ். மாநகர சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின அழிப்பை நினைவு கூர்ந்து, சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னரே யாழ்ப்பாணம் மாநகர சபையின் இன்றைய அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர மேயர் திருமதி விவேகானந்தராஜா மதிவதனி தலைமையில் இன்றைய சபை அமர்வுகள் நடைபெற்றன.

சபை ஆரம்பமாவதற்கு முன்னதாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கான அழைப்பை மேயர் விடுத்தார்.

சபை மண்டபத்தில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பைச் சித்தரிக்கும் ஒளிப்படம் வைக்கப்பட்டிருந்தது.

அதன் முன்பாகப் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, சபையில் பிரசன்னமாகியிருந்த அனைத்து உறுப்பினர்களும் மலர் தூவித் தமது அஞ்சலியைச் செலுத்தினர்.

மலர் அஞ்சலியைத் தொடர்ந்து, உயிரிழந்த உறவுகளுக்காகச் சபையில் அக வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகளுக்குப் பின்னரே, மாநகர சபையின் வழமையான சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

69 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0