• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 14, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

திருமுறுகண்டி கோவிலின் வருமானம் முல்லைத்தீவின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டும்.!

Mathavi by Mathavi
May 14, 2026
in இலங்கை செய்திகள்., முல்லைதீவு செய்திகள்
0
திருமுறுகண்டி கோவிலின் வருமானம் முல்லைத்தீவின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

திருமுறுகண்டி கோவிலின் வருமானம் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்தார்.

ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (14.05.2026) இடம்பெற்றது.

இதன்போது கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
முல்லைத்தீவு மாவட்டத்தின் திருமுறுகண்டி கோவிலுக்கு கிடைக்கின்ற வருமானங்கள் அனைத்தும் தற்போது பெளத்தசாசன அமைச்சிற்கே செல்கின்றது. குறித்த ஆலயமானது நீதிமன்ற வழக்கில் உள்ள ஓர் ஆலயமாகும். வருடாந்தம் பல மில்லியன் ரூபாய் இவ்வாலயத்திற்கு வருமானமாக கிடைக்கின்றது. அவ்வாறு கிடைக்கப்பெறும் வருமானங்கள் பெளத்தசாசன அமைச்சிற்கு செல்வதுடன் அவை மீண்டும் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு கூட திரும்பி வருவதில்லை. குறித்த ஆலயத்தின் மூலம் வருமானமாக பெறப்பட்ட பணமானது வெவ்வேறு தேவைகளுக்காக வடக்கு மாகாணத்திற்கு வெளியே பயன்படுத்தப்படும் நிலை காணப்படுகின்றது.

அவ்வாறில்லாமல், குறித்த ஆலயத்தின் மூலம் வருமானமாக பெறப்படுகின்ற பணமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகள் மிகவும் வருமானம் குறைந்த சபைகளாகும். அவற்றின் அபிவிருத்திசார் செயற்பாடுகளுக்கு இப்பணம் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் மாவட்டத்தில் வேறு அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளுக்கும் அதனை பயன்படுத்தலாம். அதனை இந்த சபை இன்று தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.

அத்துடன் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கான தனிப் பிரதேசசபையினை அமைக்க வேண்டும் என பலரும் கடந்த காலங்களில் பேசியிருந்தனர். இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் விசேட உரையொன்றின் மூலம் நான் குறித்த கோரிக்கையினை அரசாங்கத்திற்கு முன்வைத்திருந்தேன். இந்த பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் இப்பகுதியை சேர்ந்தவர் எனும் வகையில் குறித்த விடயத்தை இன்றைய கூட்டத்தின் தீர்மானமாக நிறைவேற்றி அவருக்கு முன்னிலைப்படுத்துவதுடன் அரசாங்கத்திற்கும் அனுப்பிவைப்போம். இது தொடர்பில் விசேட கரிசனையெடுத்து செயற்படுமாறு தலைவரை கேட்டுக்கொள்கின்றேன்.

அத்தோடு அண்மையில் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த கலந்துகொண்ட வன்னி மாவட்டத்திற்கான கூட்டமொன்றில் அவரால் தெரிவிக்கப்பட்டதற்கமைவாக, அரச திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அல்லது தனியாருக்கு சொந்தமான காணிகளுக்கு அதற்குரிய ஏதேனும் ஆவணங்கள் இருப்பின் அவற்றை கிராம சேவையாளர் ஊடாக பிரதேச செயலாளருக்கு வழங்கி அவற்றின் தொகுப்பினை மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு காணி விடுவிப்புக்கான முன்மொழிவாக வழங்கவேண்டும் எனும் தீர்மானத்தினையும் இக்கூட்டத்தில் முன்மொழிகின்றேன் என தெரிவித்தார்.

Related Posts

தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஏழு ஊழியர்கள் கைது.!

தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஏழு ஊழியர்கள் கைது.!

by Mathavi
May 14, 2026
0

கண்டி நகரத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஏழு ஊழியர்கள் மோசடிக் குற்றச்சாட்டு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி நகரத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின்...

நுவரெலியா மாவட்டத்தில் தொடர் மழை.!

நுவரெலியா மாவட்டத்தில் தொடர் மழை.!

by Mathavi
May 14, 2026
0

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று 14 ஆம் திகதி காலை முதல் கடும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள...

கணேமுல்ல சஞ்சீவ கொ*லை; கம்பஹா ஒஸ்மண்ட் கைது.!

கணேமுல்ல சஞ்சீவ கொ*லை; கம்பஹா ஒஸ்மண்ட் கைது.!

by Mathavi
May 14, 2026
0

பாதாள உலகக் கும்பல் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ என்பவரைத் திட்டமிட்டு கொலை செய்யவதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், ஒஸ்மண்ட் குணசேகர எனப்படும் “கம்பஹா ஒஸ்மண்ட் ” என்பவர்...

யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு.!

யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 14, 2026
0

பொலன்னறுவை, மெதிரிகிரியைப் பகுதியில் நேற்று மாலை காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- மேற்படி விவசாயி தனது...

கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக்கூடாது.!

கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக்கூடாது.!

by Mathavi
May 14, 2026
0

முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராம மக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புக்குள்ளாகி வருகின்ற நிலையில் அவர்களை மாற்று இடங்களில் குடியேற்றத்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 14, 2026
0

மாத்தளை, கட்டுதெனிய பிரதேசத்தில் வசித்து வந்த 52 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கட்டுதெனிய...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்.!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்.!

by Mathavi
May 14, 2026
0

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒட்டுசுட்டான் பிரதேச...

விபத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 14, 2026
0

காலி - பிடிகல - பெலவத்தை பிரதான வீதியின் கரவ்வ 15ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மேல்...

இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்.!

இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்.!

by Mathavi
May 14, 2026
0

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருப்பதற்கு அனுமதி அளித்த சம்பவம் தொடர்பாக, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள்...

பொலிஸ் பரிசோதகர் சுட்டுக் கொ*லை; உந்துருளி ஓட்டுநர் கைது.!

இலஞ்சம் பெற்ற வருமான வரி அலுவலக ஊழியர் கைது.!

by Mathavi
May 14, 2026
0

35 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட பொலன்னறுவை மாவட்ட வருமான வரி அலுவலக துப்புரவு பணியாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி