உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ராஜபக்ஷர்கள் ஊழலுக்குரிய சாதகமான சூழலை நிர்வாகக் கட்டமைப்பில் உருவாக்கினார்கள்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
34 பார்வைகள்

ஸ்ரீ லங்கா விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவின் நிலைக்கு ராஜபக்ஷர்கள் பொறுப்புக்கூற வேண்டும். தமக்கு தேவையானவர்களை பதவிக்கு கொண்டு வந்து அதனுடாக ஊழல் செய்து இறுதியில் அவர்களை காட்டிக் கொடுப்பது ராஜபக்ஷர்களின் கொள்கையாகும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
கபில சந்திரசேனவின் நிலைக்கு ராஜபக்ஷர்கள் தான் பொறுப்புக்கூற வேண்டும். சிறந்த வர்த்தகரான கபில சந்திரசேனவை ராஜபக்ஷர்கள் ஸ்ரீ லங்கா விமான சேவைகள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக்கி தமது தேவையை நிறைவேற்றிக் கொண்டார்கள்.

எயார்பஸ் கொள்வனவு தொடர்பில் வெளிநாட்டு நிறுவனத்தின் வெளிப்படுத்தலுக்கமைவாகவே முறைப்பாடளிக்கப்பட்டு, விசாரணைகள் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டன.

இந்த கொள்வனவின் போது இடம்பெற்ற மோசடியின் ஒருதொகை நிதியை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கியதாக கபில சந்திரசேன இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைத்துள்ள பின்னணியில் தான் கபில சந்திரசேன உயிரிழந்துள்ளார்.

ராஜபக்ஷர்கள் கடந்த காலங்களில் ஊழலுக்குரிய சாதகமான சூழலை நிர்வாக கட்டமைப்பில் உருவாக்கினார்கள்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்தால் ராஜபக்ஷர்கள் செல்ல வேண்டும் அதனை விடுத்து பெரஹராவுக்கு செல்வதை போன்று ஆட்களை திரட்டிக் கொண்டிருக்க கூடாது. சட்டம் அனைவருக்கும் பொதுவானது. ராஜபக்ஷர்கள் ஒன்று விதிவிலக்கல்ல என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

68 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0