• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 7, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு.!

Mathavi by Mathavi
May 11, 2026
in இலங்கை செய்திகள்.
0
தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து.!
Share on FacebookShare on Twitter

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, யட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – கொழும்பு வீதியின் கபுலுமுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் யட்டியாந்தோட்டை – பருஸ்ஸெல்ல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கரவனெல்ல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, எதிரே வந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதியும், பின்னால் பயணித்த 14 வயது சிறுவனும் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி சாரதி உயிரிழந்தார்.

விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பல்லபான பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ஹேம்மாத்தகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றின் பின்னால் வந்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சாரதி மற்றும் பின்னால் பயணித்த நபர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னால் பயணித்தவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கொழும்பு பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வார்ட் பிளேஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொரளை சந்தி நோக்கி பயணித்த கார் ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஹபரணை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், இறக்குவானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பை – தெனியாய வீதியின் ஹெந்தரலிய பகுதியில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இறக்குவானை நோக்கி பயணித்த உழவு இயந்திரத்தின் கொக்கி உடைந்ததால், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.

விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் அதில் பயணித்த நால்வர் காயமடைந்து இரக்குவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கஹவத்தை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

டொலர் அதிகரிப்பு தற்காலிகமே; நாடு மீண்டும் வீழ்ச்சியடையாது.!

டொலர் அதிகரிப்பு தற்காலிகமே; நாடு மீண்டும் வீழ்ச்சியடையாது.!

by Mathavi
June 7, 2026
0

அண்மைக்காலமாக அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து வருவதானது, இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதைக் குறிக்கவில்லை என்றும், தவறான பிரசாரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற...

சுரேஷ் சலேவுக்கு அநீதி; போராட்டம் வெடிக்கும்.!

சுரேஷ் சலேவுக்கு அநீதி; போராட்டம் வெடிக்கும்.!

by Mathavi
June 7, 2026
0

இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் பட்சத்தில், நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ள "சட்ட ரீதியாக...

மாகாண சபைத் தேர்தல் ‘ஓகே’ அதிகாரப் பகிர்வு ‘நோ’

மாகாண சபைத் தேர்தல் ‘ஓகே’ அதிகாரப் பகிர்வு ‘நோ’

by Mathavi
June 7, 2026
0

வடக்கு மாகாண சபைக்குப் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என நம்புகின்றோம் என்று முன்னாள் அமைச்சர் சரத்...

இனி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்.!

இனி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்.!

by Mathavi
June 7, 2026
0

தான் இனி ஒருபோதும் தீவிர அரசியலுக்கு வரப்போவதில்லை என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, எதிர்காலத்தில்...

சிறுவனைத் தாக்கிய நால்வர் கைது.!

அதிரடி சோதனையில் சிக்கிய 75 இளைஞர்கள்.!

by Mathavi
June 7, 2026
0

அம்பலாங்கொடை இடம்தோட்ட பகுதியில் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் போதைப்பொருட்களுடன் 75 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (6)...

2029 இற்கு முன் ரணில் மீண்டும் ஜனாதிபதி; ராஜித அதிரடி அறிவிப்பு.!

2029 இற்கு முன் ரணில் மீண்டும் ஜனாதிபதி; ராஜித அதிரடி அறிவிப்பு.!

by Mathavi
June 7, 2026
0

இலங்கையில் 2029ஆம் ஆண்டுக்கு முன்னரே ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாவார் என்றும், நாட்டின் நலனுக்காக அந்தச் சவாலை அவர் ஏற்பார் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன...

கிரியெல்லவில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது.!

விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற காரின் சாரதி கைது.!

by Mathavi
June 7, 2026
0

ஹங்வெல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பல்கம - பனாகொட வீதியில் நேற்று (06) சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

கணவனை கொ*லை செய்த மனைவி.!

by Mathavi
June 7, 2026
0

ஹொரணை, அரம்பகந்த பகுதியில் மனைவி ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் அரம்பகந்த, ஹொரணை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய...

மீண்டும் பலம் பெறும் மொட்டு; சானக்க, ஜோன்ஸ்டனுக்கு முக்கிய பொறுப்புகள்.!

மீண்டும் பலம் பெறும் மொட்டு; சானக்க, ஜோன்ஸ்டனுக்கு முக்கிய பொறுப்புகள்.!

by Mathavi
June 7, 2026
0

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து எதிர்கால அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்கான முழு அதிகாரமும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

இரு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

இரு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

by Mathavi
June 7, 2026
0

கம்பஹா மாவட்டம், மீரிகமை பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி 26 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி