உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தேசிய இளைஞர் விளையாட்டு விழா; யாழ். மாவட்ட பூப்பந்து போட்டிகளில் நல்லூர் பிரதேசம் ஆதிக்கம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
45 பார்வைகள்

36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான மாவட்ட மட்ட பூப்பந்து (Badminton) போட்டிகள் நேற்றையதினம் (10/05/2026) ஞாயிற்றுக்கிழமை கொக்குவில் உள்ளக விளையாட்டரங்கில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த சிறந்த வீரர்கள் பங்கேற்ற இப்போட்டிகளில், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி முக்கிய இடங்களைக் கைப்பற்றினர்.

ஆண்கள் பிரிவு முடிவுகள்
ஆண்களுக்கான தனிநபர் பிரிவில் நல்லூர் பிரதேசத்தைச் சேர்ந்த வீரர்கள் முதல் இரண்டு இடங்களைப் பகிர்ந்து கொண்டனர்:
முதலாம் இடம்: M. அன்ரன்வவீசன் (நல்லூர்), இரண்டாம் இடம்: K. லிஜிந்தன் (நல்லூர்), மூன்றாம் இடம்: S. றமநீதன் (கரவெட்டி)

பெண்கள் பிரிவு முடிவுகள்
பெண்களுக்கான பிரிவிலும் நல்லூர் பிரதேச வீராங்கனைகள் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.
முதலாம் இடம்: S. சங்கவி (நல்லூர்), இரண்டாம் இடம்: R. றாகவி (பருத்தித்துறை), மூன்றாம் இடம்: Y. கீர்த்தனா (நல்லூர்) வெற்றி பெற்றனர்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடங்களைக் கைப்பற்றிய வீரர்கள், அடுத்து நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டிகளில் யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

68 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0