• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 6, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மன்னார் நகர மீன் விற்பனை நிலையம் நவீனமயப்படுத்தப்பட்டு மக்கள் கையில் ஒப்படைக்கப்பட வேண்டும்.!

Mathavi by Mathavi
May 6, 2026
in இலங்கை செய்திகள்., மன்னார் செய்திகள்
0
மன்னார் நகர மீன் விற்பனை நிலையம் நவீனமயப்படுத்தப்பட்டு மக்கள் கையில் ஒப்படைக்கப்பட வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

மன்னார் நகர மீன் விற்பனை நிலையம் உடனடியாக நவீனமயப்படுத்தப்பட்டு மக்கள் கையில் ஒப்படைக்கப்பட வேண்டும் என மன்னார் நரக சபை உறுப்பினர் சோமநாதன் பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று புதன்கிழமை (6) மதியம் மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் நகர சபையின் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்த செயல்பாடுகள் இரு மாதங்களில் ஒரு வருடத்தை கடக்கவுள்ளது. இதுவரைக்கும் நாங்கள் நகரசபையால் பிரயோசனமாக மக்களுக்கு என்ன செய்தோம் என்பதில் ஒரு கேள்விக்குறிதான்.

இருந்தாலும் எங்களால் முடிந்தவரை எங்களுடைய வட்டாரங்களுக்கு நாங்கள் செய்திருக்கிறோம். அதேநேரம் இன்றைய ஊடக சந்திப்பின் முக்கிய காரணம் என்னவென்றால், நாங்கள் இதில் ஏழாம் மாதம் 9ஆம் திகதி 2025ஆம் ஆண்டு ஒரு பிரேரணை கொடுத்திருக்கிறோம்.

மீன் சந்தை, மரக்கறி சந்தை புனரமைத்தல் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரிப்பின்றி உள்ள வெற்றிட காணிகளை துப்புரவு செய்யச் சொல்லி ஒரு பிரேரணை கொடுத்திருக்கிறோம்.

இதே மாதிரி ஐந்துக்கும் மேற்பட்ட பிரேரணைகள் கொடுத்திருக்கிறோம். இதுவரைக்கும் எந்த ஒரு பிரேரணையும் சபைக்கு வந்ததும் இல்லை. கருத்தில் கொள்ளப்பட்டதும் இல்லை. நாங்கள் கொடுக்கும் பிரேரணைகள் எல்லாம் குப்பையில் தான் போய்க்கொண்டிருக்கிறது.

போதாக்குறைக்கு இப்போது சபை அமர்வுகளில் கலந்து கொள்ள ஊடகங்களுக்கு அனுமதி இல்லை. நாங்கள் என்ன பேசுகிறோம் என்று மக்களுக்கும் வெளியே தெரிவதில்லை. அதனால் இந்த ஊடக சந்திப்பை வைக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம்.

கடைசியாக நடந்த கூட்டத்தில் உங்களுக்குத் தெரியும், அண்மையிலே மீன் விற்பனை நிலையத்தில் மீன் விற்பனை செய்யும் ஒருவர் தங்களுடைய குறைகளை சொல்லியிருந்தார்.

நாங்கள் ஏழாம் மாதம் 2025லேயே இதற்கெல்லாம் கொடுத்தும் இதுவரை நடக்காத காரணத்தால், எங்களிடம் பகிரங்கமாக கடந்த கூட்டத்தில் சபையில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு சவாலாகவோ கோரிக்கையாகவோ இருக்க வேண்டும்.

இந்த மீன் விற்பனை நிலையம் கட்டுவது சம்பந்தமாக மீனவர் சங்கம் அல்லது மீன் வியாபாரிகள் தங்களுக்கு அனுமதி தரவில்லை, முடிந்தால் அனுமதி பெற்றுத் தாருங்கள் என்று எங்களிடம் ஒரு சவால் விட்டிருந்தார்கள்.

நாங்கள் அது சம்பந்தமாக அவர்களோடு பேசிய இடத்தில், ‘நாங்கள் அப்படி ஒன்றும் இல்லை, உடனடியாகத் தருகிறோம்’ என்று சொல்லி இந்த மீனவர் சங்கமும் கடிதம் தந்திருக்கிறது.

அதேநேரம் மீன் விற்பனை நிலையத்தில் மீன் விற்கும் வியாபாரிகளும் கையெழுத்துப் போட்டுத் தந்திருக்கிறார்கள். தங்களுடைய மீன் சந்தையை புனரமைத்துத் தரும்படி. அது எப்படி என்றால், பகுதி பகுதியாக முதலில் பின் பக்கத்தைப் புனரமைத்து அங்கே வியாபாரத்தை தொடர்ந்து விட்டு பிறகு முன் பக்கத்தை செய்யுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.

ஏனென்றால் எங்களுடைய நாட்டில் உள்ள சட்ட திட்டங்கள் உங்களுக்குத் தெரியும். முதலில் எல்லாம் ஆரம்பம் செய்வோம் என்று இடிப்பீர்கள், பிறகு ஒவ்வொரு நிறுவனமாக வந்து அனுமதி தர மாட்டார்கள் என்று அது கிடப்பில் போய்விடும்.

அதனால் பகுதி பகுதியாகப் புனரமைத்துத் தாருங்கள், ஏனென்றால் இது அன்றாடம் மக்கள் பயன்படுத்துகிற ஒரு இடம். வருடா வருடம் இதிலிருந்து 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வருமானங்கள் குத்தகை மூலம் கிடைக்கிறது. அப்படி இருந்தும் எங்களுடைய சொத்தை நாங்கள் தான் பராமரித்துக் கொடுக்க வேண்டும்.

அதற்கான முழு கடிதத்தையும் எடுத்திருக்கிறோம். இன்றே நாங்கள் இதைச் செயலாளரிடம் கொடுக்கிறோம். இதைக் கொடுப்பதற்குக் காரணம் என்னவென்றால் ஏற்கனவே நாங்கள் கொடுத்த பிரேரணைகள் எதுவுமே எடுபடவில்லை. அதேபோல் இந்த விடயத்தையும் குப்பையில் போட்டுவிடக் கூடாது.

இது மன்னார் மக்கள் சார்பாக கொடுக்கிறோம். மன்னார் மக்கள் ஒவ்வொருவரும் இனி கேள்வி கேட்கலாம், தந்த கடிதத்திற்கு என்ன முடிவு? எப்போது புனரமைப்பீர்கள் என்று.

ஏனென்றால் எங்களுடைய நகரசபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட வேலைகள், எங்களால் செய்யக்கூடிய வேலைகளைத்தான் வாக்குறுதியாக மக்களுக்குக் கொடுக்க வேண்டும்.

அண்மைக்காலமாக நகரசபை எங்களுடைய அதிகாரத்திற்கு உட்படாத, நாங்கள் செய்யாத பொய் வாக்குறுதிகளை கொடுத்து சும்மா ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உடனடியாக குறைந்தது ஒரு மூன்று மாதத்திற்குள் இந்த மீன் மார்க்கெட் நவீனமயப்படுத்தப்பட்டு மக்கள் கையில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

நகரசபையின் போக்குகள் எங்களுக்குத் தெரியும், நாங்கள் என்ன சொல்லியும் எடுபடுவதில்லை. ஒரு குறிப்பிட்ட ஆதரவுக் குழு, அவர்கள் சொல்வது மட்டும்தான் நடக்கும். அதனால் இந்தப் பிரேரணைகளை நாங்கள் கொடுத்தும் பிரயோசனம் இல்லை. சபையில் பேசியும் பிரயோஜனம் இல்லை. அதனால்தான் பகிரங்கமாகத் தருகிறோம். இதன் போது நகர சபை உறுப்பினர் பார்த்திபன் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தார்.

Related Posts

கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 6, 2026
0

இரத்தினபுரி - பெல்மதுளை பகுதியில் இன்று அதிகாலை லொறி - முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் முச்சக்கரவண்டி சாரதி...

விவசாயிகள் வீதிக்கு இறங்கினால் இந்த அரசாங்கம் தப்பவே முடியாது.!

விவசாயிகள் வீதிக்கு இறங்கினால் இந்த அரசாங்கம் தப்பவே முடியாது.!

by Mathavi
May 6, 2026
0

"வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயிகள் எதிர்கொண்டுள்ள விவசாயம் சார்ந்த சிக்கல்களுக்கு அரசு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும். தவறினால், விவசாயிகள் அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்கிப்...

தமிழக முதல்வராகும் விஜய் விரைவில் இலங்கை வருவார் என நம்புகின்றோம்.!

தமிழக முதல்வராகும் விஜய் விரைவில் இலங்கை வருவார் என நம்புகின்றோம்.!

by Mathavi
May 6, 2026
0

"தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்த பின்னர் விஜய் இலங்கை வருவார் என நம்புகின்றோம்" என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி....

நீதிமன்றத்தின் மீதான நிறைவேற்று அதிகாரத்தின் தலையீடு; நாடாளுமன்ற விவாதத்தைக் கோரி எதிர்க்கட்சிகள் பிரேரணை.!

நீதிமன்றத்தின் மீதான நிறைவேற்று அதிகாரத்தின் தலையீடு; நாடாளுமன்ற விவாதத்தைக் கோரி எதிர்க்கட்சிகள் பிரேரணை.!

by Mathavi
May 6, 2026
0

நீதிமன்றங்களுக்கு நிறைவேற்று அதிகாரத்தால் விடுக்கப்படும் அழுத்தங்களைக் கண்டித்தும், இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவசர விவாதத்தை நடத்துமாறு கோரியும் எதிர்க்கட்சிகளினால் தயாரிக்கப்பட்ட விசேட பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது....

வித்தியா கொ*லை வழக்கு; நால்வரின் மரண தண்டனை உறுதி.!

வித்தியா கொ*லை வழக்கு; நால்வரின் மரண தண்டனை உறுதி.!

by Mathavi
May 6, 2026
0

முழு நாட்டையும் உலுக்கிய யாழ்ப்பாணம் - புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம்...

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது.!

போலி வைத்தியர் ஒருவர் கைது.!

by Mathavi
May 6, 2026
0

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் குருநாகல், பன்னல...

யாழில் கோர விபத்து; சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்.!

யாழில் கோர விபத்து; சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்.!

by Mathavi
May 6, 2026
0

யாழ். புங்குடுதீவு பகுதியில் மோட்டார் சைக்கிளும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன்போது புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த ரமணன் நிதுசன்...

காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மின் விளக்குகள் அமைக்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மின் விளக்குகள் அமைக்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

by Mathavi
May 6, 2026
0

அரசாங்கம் பாராமுகமாக செயற்படாமல் எல்லைப்புற கிராமங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து நிரந்தர யானை வேலியை அமைக்க முன்வரவேண்டும் என போரதீவுப்பற்று பிரதேச...

மதுபானசாலை திறப்பதற்கு எதிராக போராட்டம்.!

மதுபானசாலை திறப்பதற்கு எதிராக போராட்டம்.!

by Mathavi
May 6, 2026
0

நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது நோர்வூட் நகரில் புதிதாக ஒரு மதுபானசாலை திறப்பதற்கு எதிராக இன்று 06.05.2026 திகதி காலை 9.00.மணி முதல் 10.30. மணி...

முதலுதவிப் பெட்டிகள் கையளிப்பு.!

முதலுதவிப் பெட்டிகள் கையளிப்பு.!

by Mathavi
May 6, 2026
0

இன்றையதினம் Humedica சர்வதேச தொண்டு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட முதலுதவிப் பெட்டிகள் (First Aid Kits), வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்காக இன்று...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி